India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ஜே. ராஜசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி வேலுதேவன் , அரூர் செந்தில் ராஜ்மோகன், பென்னாகரம் குமரவேல், மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்கு 267 வழக்குகள் பதியப்பட்டு, 7962 பாட்டில்கள்(1432.710 லிட்டர்) மற்றும் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர் நேதாஜி ஸ்டேடியம் வரை நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மரத்தான் போட்டியில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பங்கேற்று ஓடினார். இந்த மரத்தான், போதைப்பொருள் தடுப்பு மற்றும் இளைஞர்களுக்கு உடல்நலத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
வேலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வேலூரில் உள்ள மக்கள் வெளியில் செல்லும் போது உரிய உபகரணங்களை உடன் கொண்டு செல்லுங்கள். இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம் எனவே மெழுகுவர்த்தி போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க
நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மேல அரியகுளத்தில் சுடலையாண்டி(72), சேர்மவேல்(60), ராமசுப்பிரமணியன்(25) ஆகியோரது பட்டறையை சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களான 9 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகவலை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த எண்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
✅இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த எண்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
✅இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாலை விபத்துகள் 15 சதவீதம் ஆக தடுக்கப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை சாலைகளில் 169 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்றும், இதனால் குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டியில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலின் சிறப்பு தெரியுமா? இங்கு தேவி 72 அடி உயரத்தில் சிங்க முகத்துடனும், மனித உடலுடனும் காட்சியளிக்கிறாள். நரசிம்மரின் கோபத்தை தணிக்க சிவபெருமான் தனது நெற்றிக்கண் மூலம் தேவியை உருவாக்கியதாக புராணம் கூறுகிறது. தேவியின் தலத்தில் வழிபடும் பக்தர்களின் எதிர்மறை சக்திகளான பில்லி, சூனியம் போன்றவை நீங்குவதாக நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.