Tamilnadu

News April 19, 2025

புதுக்கோட்டை இளைஞரை கௌரவித்த சிங்கப்பூர் அரசு

image

சிங்கப்பூரில் கடந்த 8ஆம் தேதி, ரிவர் வேலி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் மகன் உள்ளிட்ட 22 பேரை காப்பாற்றிய புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ் உட்பட 4 பேரை சிங்கப்பூர் அரசு பாராட்டி விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு “Community Lifesaver Award” வழங்கி கௌரவித்துள்ளது.

News April 19, 2025

ஈரோட்டில் பொதுமக்கள் அடித்ததால் உயிரிழந்த நபர்!

image

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதி. இவர்கள் வீட்டிற்கு வந்த வட மாநில இளைஞர் ஒருவர், சுப்பிரமணியை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜெயலட்சுமி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் வந்து, இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 19, 2025

புதுச்சேரி: தனியார் வங்கியின் லிங்க் மூலம் மோசடி

image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வாட்ஸ் ஆப்பில் தனியார் வங்கியின் லிங்க் ஒன்று வந்துள்ளது. வெங்கடேசன் அந்த லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.23 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 19, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

image

அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரைச் சேர்ந்த விக்னேஷ்ராஜ்(26) மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் 18ஆம் தேதி  சிற்றுந்து ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என்ற காரணத்தால், கீழப்பழூர் காவல் ஆய்வாளர் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 19, 2025

நீலகிரி மாவட்டம் முழுவதும் நெகிழி சேகரிக்கும் பணி!

image

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், அரசு மாணவர் விடுதிகள், வனப்பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், மாவட்ட எஸ். பி. நிஷா, கூடுதல் கலெக்டர் கவுசிக், வன அலுவலர் கவுதம் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்று, நெகிழி சேகரிப்பில் இன்று காலை 8 மணி முதல் ஈடுபட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 19, 2025

பனியன் துணி வாங்கி மோசடியில் ஈடுபட்டவர் கைது

image

திருப்பூர் காந்திநகரில் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் மகேஷ் ராமசாமி. இவரிடம் ஐதராபாத்தை சேர்ந்த தம்பதி, பனியன் துணிகள் வாங்கி ரூ.1.45 கோடி, மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மகேஷ் ராமசாமி அளித்த புகாரின்பேரில், போலீசார் தம்பதியை தேடி வந்தனர். இந்நிலையில், மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த, பிரவீன் குமார் யெச்சூரி, கல்பனா யெச்சூரி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News April 19, 2025

கார் மோதியதில் காவலாளி உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் காவலாளி சித்தையன். இவர் டூவிலரில் வாழ்வாங்கிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வரும் போது தூத்துக்குடியில் இருந்து வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சித்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 19, 2025

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

image

திருவண்ணாமலை, கலசபாக்கம் அடுத்த தேவராயம் பாளையத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (8). பள்ளி விடுமுறை என்பதால் நேற்று (ஏப்ரல்.18) ஏரியில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உள்ளார். அந்த வழியாக சென்ற மக்கள் சிறுவனை மீட்டு ஆதமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 19, 2025

கோவை அருகே விபத்தில் பெண் உயிரிழப்பு!

image

கோவை, சிறுமுகை ஆலாங்கொம்பை சேர்ந்தவர் முருகேசன். இவர் நேற்று மாலை தனது மனைவி ஜோதிமணியுடன், பைக்கில் மேட்டுப்பாளையம் சென்றுள்ளார். அப்போது, தாலுகா அலுவலகம் அருகே சென்ற போது, வேகத்தடையில் பைக் நிலை தடுமாறியதில், ஜோதிமணி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதிமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 19, 2025

குழந்தை இல்லாத சோகம்; பெண் தற்கொலை

image

கள்ளக்குறிச்சி, ஏ.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் மணிமொழி. இவருக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் மனவருத்தத்தில் இருந்து வந்த அவர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல

error: Content is protected !!