Tamilnadu

News April 24, 2025

ஈரோடு: முக்கிய காவல் நிலைய எண்கள்

image

▶️ஈரோடு டவுன் காவல் நிலையம் 9498101220. ▶️மொடக்குறிச்சி காவல் நிலையம் 3438101242. ▶️பெருந்துறை காவல் நிலையம் 9498101244. ▶️கொடுமுடி காவல் நிலையம் 9498101240. ▶️பவானி காவல் நிலையம் 9498101213. ▶️அந்தியூர் காவல் நிலையம் 9498101218. ▶️கோபி காவல் நிலையம் 9498101232. ▶️நம்பியூர் காவல் நிலையம் 9498101243. ▶️சத்தி காவல் நிலையம் 9498101246. ▶️தாளவாடி காவல் நிலையம் 9498101249. இதை SHARE பண்ணுங்க.

News April 24, 2025

வேலூரில் நாளை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை ஏப்ரல் 25-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2025

கோவை: சுகாதாரத்துறையில் வேலை!

image

கோவை மாநகராட்சியில் செயல்படும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 நகர சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 8வது முதல் டிகிரி படித்தவர்கள் வரை தகுதிக்கேட்ப வேலை வழங்கப்படுகிறது. இந்த பணிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை SHARE பண்ணுங்க.

News April 24, 2025

நாளை பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

image

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை டாடா எலக்ட்ரானிக் நிறுவனம் நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கல்வி தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். அசல் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ வுடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அறிவித்துள்ளார்.

News April 24, 2025

புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை

image

புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ரூ.50,000 வரை சம்பளத்தில் காலியாக உள்ள Guest Faculty (English) பணியிடம் நிரப்ப உள்ளதாகவும், 28.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க…

News April 24, 2025

தேவகோட்டையில் சிறப்பு ஆதார் முகாம்

image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒன்பதாவது வார்டு தேனம்மை ஊரணி நகராட்சி தொடக்க பள்ளியில் ஏப்ரல்.24 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வியாழக்கிழமை வரை (ஒரு வாரத்திற்கு) தபால் துறை சார்பாக நடத்தும் குழந்தைகளுக்கான இலவச ஆதார் அட்டை எடுக்கும்  முகாமநடைபெற உள்ளது. (ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை) *ஷேர் பண்ணுங்க

News April 24, 2025

கரூரில் சமூக சேவையாற்றும் இளைஞர்களா நீங்க!

image

சமூதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் பணம் வழங்கப்படும். விண்னபிக்க <>இங்கே க்ளிக்<<>> செய்யவும் அல்லது 7401703493 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யவும்.

News April 24, 2025

எஸ்.ஐ. வேலைக்கு இலவச பயிற்சி

image

1,299 சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இத்தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை மறுநாள் (ஏப்ரல் 26) முதல் தொடங்க உள்ளது. பயிற்சி வகுப்பு சனி, ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 – மாலை 4:00 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளோர், 96264 56509, 63815 52624 என்ற மொபைல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 24, 2025

நெல்லை- மும்பை கோடை ரயிலுக்கு முன்பதிவு தொடக்கம்

image

கோடை விடுமுறையை முன்னிட்டு நெல்லை வழியாக கன்னியாகுமரி – மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மே.8 முதல் ஜூன்.26 வரை வியாழக்கிழமை தோறும் பகல் 1:30 மணிக்கு குமரியில் புறப்படும். மறு மார்க்கத்தில்  புதன்கிழமை தோறும் மே.7 முதல் ஜூன்.25 வரை மும்பையில் இருந்து புறப்படும். இந்த ரயிலுக்கு முன்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News April 24, 2025

தேனியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட இயந்திர அபரேட்டர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து மே மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவவும்.

error: Content is protected !!