Tamilnadu

News March 21, 2025

அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவன் பலி

image

விழுப்புரம் மாவட்டம் வளவனூா், பாலாஜி நகரை சோ்ந்தவர் அய்யப்பன் (13). வளவனூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 8-வது படித்து வந்தாா். அய்யப்பனும், இதே பகுதியைச் சோ்ந்த கவின் (12), சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து சைக்கிள் மீது மோதியது. இதில், அய்யப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கவின் படுகாயமடைந்தார். புகாரின் பேரில் ஓட்டுநர் மீது வளவனூா் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 21, 2025

திருப்பத்தூர் பெயர் காரணம் தெரியுமா?

image

சந்தன மாநகர் என்றும் அழைக்கப்படும் திருப்பத்தூர் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் “திருப்பத்தூர்” என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருவனபுரம் என்ற பெயரை “திருப்பத்தூர்” என்று மாற்றியதாக கூறப்படுகிறது. உங்களை போல் மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.

News March 21, 2025

16 வயது சிறுமி கர்ப்பம்

image

பெரியப்பட்டியை சேர்ந்தவர் பிரபு (20) இவர் 16 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமியை கடந்த ஜன.20 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் அச்சிறுமிக்கு கடந்த, 11ல் கரு கலைந்துள்ளது, தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.இதையறிந்த காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 21, 2025

தகவல் அளித்தால் ரூ.2,000 வெகுமதி

image

தமிழகத்தில் குழந்தை திருமணம் குறித்து அதிகாரிகள் பல்வேறு நடவக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா கூறுகையில், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடக்கிறது. இதை தடுக்கும் விதமாக கிராமம் வாரியாக குழு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளித்தார் ரூ.2,000 வெகுமதி வழங்கப்படும் என்றார்.

News March 21, 2025

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு இன்று விசாரணை

image

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் தொடர்புடைய 37 சிறார்கள், கடந்த பிப்.21 நீதிமன்றத்தில் ஆஜராகினர். பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 2022ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 1,100 பக்க இறுதி அறிக்கை நகல், வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இதன் விசாரணை இன்று நடைபெறுகிறது.

News March 21, 2025

குழந்தை திருமணம்: கலெக்டர் எச்சரிக்கை

image

குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் ரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் நலக் குழு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரையை 99409-91160 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2025

21 குண்டு முழங்க தி.மலை வீரர் உடல் நல்லடக்கம்

image

தி.மலை, செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் குமார். காஷ்மீரில் 62வது படை தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். கடந்த 18ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில், வலது மார்பில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான வெம்பாக்கம் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

News March 21, 2025

வெப்ப அலை பரவல்: ஆட்சியர் அறிவுரை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெப்ப அலை பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. தமிழகத்தில் வெப்ப அலை பரவல் எதிரொலியாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா அறிவுரை வழங்கினார்.

News March 21, 2025

மனைவியும் சுய இன்பத்தில் ஈடுபடலாம் – நீதிமன்றம்

image

கரூரைச் சேர்ந்த தனது மனைவி ஆபாச படங்கள் பார்ப்பதால் விவாகரத்து கேட்ட கணவர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்றம், ‘ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் போது பெண்களுக்கு மட்டும் அதற்கு தனியுரிமை இல்லையா..?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது கணவனை துன்புறுத்து குற்றம் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

News March 21, 2025

பிரபல ரவுடிகளால் காஞ்சிபுரம் போலீசாருக்கு தலைவலி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2023இல் 34 கொலைகள் நடந்ததாகவும், 2024இல் அவை 20ஆக குறைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு தொடங்கியது முதல் முக்கிய ரவுடிகளின் செயல்பாடுகள் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடிகளான தியாகு, தினேஷ் மற்றும் தணிகா ஆகிய மூவரையும் தேடி பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

error: Content is protected !!