India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள நாகர்கோவில் மாவட்டத்திற்கு 129 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் அவசியம். <
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும். அக்காலத்தில், அங்கு மேய்க்கப்படும் காராம்பசு ஒன்று தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த சுயம்பு லிங்கத் திருவுருவம் மீது தன்னிச்சையாக சுரந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஒருவருக்கு தெய்வ அருள் வந்து பண்ணாரி அம்மன் அங்கு இருப்பதாக வாக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. (ஷேர்)
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தரமற்றதாகவும் காலதாமதமாகவும் நடைபெறுவதாக நாடாளுமன்ற கூட்டத்தில் மயிலாடுதுறை எம்.பி சுதா குற்றம் சாட்டி பேசினார். இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்றத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை தொழில் ரீசியாகவும், கல்வி, வேலை வாய்ப்புகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் கோவை, சரவணம்பட்டி, காலாப்பட்டி, மலுமிச்சம்பட்டி, சூலூர், கோவைப்புதூர் பகுதியில் தொழில் பூங்கா, ஐடி பூங்காக்கள் வர இருப்பதற்கான மாஸ்டர் பிளானை அரசு தயார் செய்து வருகிறது. இதனால், அடுத்த 5-10 ஆண்டுகளில் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் மதிப்பு உச்சத்தை அடையவுள்ளது. (Share பண்ணுங்க)
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் கோட்டத்தில் 486 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். இதற்கு மார்ச்.21 முதல் ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். (Share பண்ணுங்க)
திருச்சி என்.ஐ.டி (NIT) நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி B.E./B.Tech. Mechanical Engineering படித்தவர்கள் மார்ச்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
தமிழ்நாடு ஆதித் திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, தாட்கோ வாயிலாக, புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 21 முதல், 25 வயதுக்கு உட்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், லிங்க் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அணைமேடு பகுதியில் 56 அடி உயரத்தில் கட்டப்பட்ட ராஜ முருகன் சிலையின் முகம் மற்றும் உடலமைப்பு சரி இல்லை என்று பலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், முருகன் சிலை மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கும்பாபிஷேக தேதியும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அழகாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுவேல்(38). கடந்த 2 ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மார்ச்.17ம் தேதி ‘களைக்கொல்லி’ மருந்தை குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்யில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மண்ணைப் பயன்படுத்தாமல் நீரியல் முறையில் வீட்டுக்குள் சட்டவிரோதமாக சாகுபடி செய்யும் ஹைட்ரோபோனிக்ஸ் வகை கஞ்சா நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பஸ் நிலையத்தில் முதல் முறையாக பிடிபட்டது. இது நீலகிரி காவல் துறையையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த வகை கஞ்சா 1 கிலோ ரூ.1 கோடி மதிப்புடையது என்பதால் காவல்துறை கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.