Tamilnadu

News March 19, 2025

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்குப்பதிவு

image

சங்கராபுரம், கள்ளக்குறிச்சி சாலையில் மைலம்பாறை அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் வீரன், கோவிந்தன் தலைமையிலான காவலர்கள் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது குடிபோதை, ஓட்டுநர் உரிமம் இல்லாதிரத்தல், அதி வேகம், ஹல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட, 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

News March 19, 2025

தூத்துக்குடியில் சரிகமப சீசன் 5-க்கு ஆடிசன்

image

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள கிரேஸ் கல்வி குழுமம் கிரேஸ் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் காலேஜ் வைத்து தனியார் தொலைக்காட்சியின் சரிகமப சீசன் 5 காண நேர்முகத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திறமையாக பாடும் மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

மதுபோதையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவர்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜூ. நேற்று (மார்ச்.18) அதிக அளவு மதுபோதையில் இருந்த இவர், தனது மனைவி காஞ்சானவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த காஞ்சானவை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காஞ்சனாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஆலங்காயம் காவல்துறையினர் ராஜூவை கைது செய்தனர்.

News March 19, 2025

பிளஸ் டூ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு

image

ஸ்கில் இந்தியன் மற்றும் தமிழ்நாடு கல்வி உதவி மையம்(Tnedusupport) இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ₹25,000, இரண்டாம் பரிசு ₹15,000, மூன்றாம் பரிசு ₹10,000 மேலும் 1000 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

News March 19, 2025

சேலம் மாநகராட்சியில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்

image

சேலம் மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் 36 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை பதிவு செய்ய இங்கே <>கிளிக்<<>> செய்து, பூர்த்திச் செய்து வரும் மார்ச் 24- ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், பழைய நாட்டாண்மைக் கட்டிட வளாகம், சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதை ஷேர் செய்யவும்.

News March 19, 2025

இந்திய கடற்படையில் 327 காலிப்பணியிடங்கள்

image

இந்திய கடற்படையில் 327 குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் – 57, லஸ்கார்‌- I – 192, தீயணைப்பாளர் – 73, டோப்பஸ்‌ – 5 என நிரப்பபடவுள்ளது. இதற்கான மாத ஊதியம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 1. இதுகுறித்து மேலும் அறிய <>(இங்கு க்ளிக்)<<>> செய்யவும். நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 19, 2025

திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச்.21ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில், 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். (Share பண்ணுங்க).

News March 19, 2025

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகரில் தாட்கோ மூலமாக 10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழகுடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் இளங்கலை அறிவியல் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை மாத ஊதியமாக பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

News March 19, 2025

இந்திய கடற்படையில் வேலை, ரூ.81,100 வரை ஊதியம்

image

இந்திய கடற்படையில் 327 குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் – 57, லஸ்கார்‌- I – 192, தீயணைப்பாளர் – 73, டோப்பஸ்‌ – 5 என நிரப்பபடவுள்ளது. இதற்கான மாத ஊதியம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 1. இதுகுறித்து மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 19, 2025

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

image

பனப்பாக்கம் அடுத்த தென்மாம்பாக்கத்தை சேர்ந்தவர் குமார் (44 ) இவர் சலூன் கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி நேற்று தேர்வு எழுத சென்றபோது பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அம்மாணவியின்  பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

error: Content is protected !!