India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 21.03.2025 நடைபெற உள்ளது.நாமக்கல் கோட்டத்திற்கு நாமக்கல் ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் உமா இன்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயிலால் ஏற்படும் நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவ்வாறு ஏற்பட்டால் மக்களை காப்பாற்ற தேவையான மருந்துகளோடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார மையத்தினை அணுகி சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னிமலை, மலையடிவாரத்தில் உள்ள வாரச்சந்தை பேட்டையில், திருநகர் காலணியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி கணேசன் என்பவர் இரத்தக்காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இது தொடர்பாக சென்னிமலை போலீசார், கணேசன் உடன் மது அருந்திய இருவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும், கொலைக்கான காரணம் என்ன என்பதும் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தில் காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்பாள் கோவில் அமைந்துள்ளது.“காசிக்குச் செல்ல முடியாதவர்கள், இங்கு வந்தால் காசிப்புண்ணியம் கிடைக்கும். இங்கே, சாமிக்கு 16 வகை அபிஷேகம் செய்து வழிபட்டால், தடைகளும் தோஷங்களும் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூடும். அம்பாளுக்குச் செவ்வரளி மாலையும் சாற்றி, தாளம்பூ குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
நெல்லை சேர்ந்த காமராஜ் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரிடம் நேற்று விமல் என்பவர் திருமணத்திற்கு போட்டோ எடுக்க வேண்டும் என கோவை அழைத்து சென்றுள்ளார். அவர்கள் பஸ்ஸில் செல்லும் வழியில் பஸ் நின்றபோது அங்குள்ள கடையில் காபி குடிப்பதற்காக இவர் இறங்கி சென்றுள்ளார். அப்பொழுது விமல் அவரது கேமரா மற்றும் உபகரணங்களை திருடி சென்று தப்பியுள்ளார். இது குறித்து காமராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனையும், ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபை கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட காவல்துறை இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில், உதவி எண் 1930-ஐ அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் குற்றங்களை பதிவு செய்து https://cybercrime.gov.in புகராளிக்கலாம். இதை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. கண்டிப்பாக பயன்படும்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நாளை (19.03.2025) காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது என்பதாக செய்தி மக்கள் தொடர்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் என்னும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு சுனை உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை மனதில் நினைத்து கொண்டு வாழைப்பழத்தை அந்த சுனையில் விடுகின்றனர். அந்த பழம் மீண்டும் மேல வந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இன்று(மார்.18) பாலியல் வன்புணர்வு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக விசாரித்து நீதி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரீதா தலைமை தாங்கினார். இதில் மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.