India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “பொதுமக்கள் நில அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு செல்லாமல் -1 என்ற இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணத்தையும் இந்த <
காட்டுமன்னார்கோயில் அருகே முட்டம் மேலத்தெருவில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், இன்று மதியம் மனோகரன் (52) என்பவரை முதலை கடித்து இழுத்ததில், கை,கால் பகுதியில் பலத்த காயம் அடைந்தார். தற்போது முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு, இதே பகுதியில் ஒருவரை முதலை கடித்தது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை (22.03.2025) முன்னிட்டு 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் 23.03.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. எனவே, அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தியுள்ளார் .
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே எம் ஜி ஆர் நகர் பகுதியில் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (30) என்ற ஆண் ஒருவர் வாடகை குடியிருப்பு வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக இறந்து கிடந்தார். தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய நிலையில், மது போதையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வருகிறது.
குமரி, கருங்கல்லில் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பகவதி அம்மன் கோவில் உள்ளது. தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 10 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த பகவதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறி கோடி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், சுயம்வர அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்கும்.*SHARE TO FRDS
விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல்வேறு தடைகள் ஏற்பட்டனஇந்நிலையில் இருவரும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிட பிரார்த்தனை செய்து ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கிராம மக்கள் வேண்டுதலுடன் கூடிய பிளக்ஸ் போர்டுகள் வைத்து வரவேற்கின்றனர். இப்படி ஒரு பிளக்ஸ் போர்டு நீங்கள் பார்த்ததுண்டா? இதை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தண்ணீரு இன்று வெளியிட்ட கோடை விழா தேதி அறிவிப்பில் இறுதி விழாவாக, இந்த ஆண்டில் முதல் முறையாக குன்னூரில் மலைப் பயிர்கள் கண்காட்சி காட்டேரி பூங்காவில் மே 31 முதல் ஜூன் 1-ம் தேதிவரை மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது. காட்டேரி பூங்காவானது குன்னூர்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி செலுத்தாதவர்கள் தாமதமின்றி வரிகளை செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மேலும் அனைத்து கிராம பொதுமக்களும் ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ, வரி வசூல் முகாம்களிலோ அல்லது https://vptax.tnrd.gov.in என்ற இணையதளத்தில் கடன் அட்டை மூலம் வரிகளை செலுத்தலாம் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE
கோவை தடாகம் சாலை, கோவில்மேடு அருகே, கல்யாணி நகரில் உள்ள வயல்வெளியில், நேற்று (மார்ச்.17) ஆரஞ்சு நிறத்தில் தவளைகள் தென்பட்டதால், அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மேலும் சிலர், அந்த தவளைகளை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அரூர் அடுத்த எலவடை கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவரை கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் திருமணம் நிலையில், ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் திருமூர்த்திக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததும், மூன்றாவதாக 17 வயது பெண்ணை திருமணம் செய்ததும் தெரியவந்தது. திருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் பிரியதர்ஷினி மனு அளித்தார்.
Sorry, no posts matched your criteria.