Tamilnadu

News March 18, 2025

கரூர்: வேண்டியதை நிறைவேற்றும் தெற்கின் திருப்பதி

image

கரூரில் தாந்தோன்றி மலையில் கல்யான வெங்கட்ரமணா பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் தெற்கின் திருப்பதி என அழைக்கப்படுவது தனி சிறப்பாகும். இக்கோயிலில்
குழந்தை வரம் மற்றும் வாழ்வில் நலம் வேண்டி துலாம் பாரம் செலுத்தினால் வேண்டியது கைகூடும் என்பது ஐதீகம். மேலும், திருமணம் ஆகாதவர்கள் பெருமாளிடம் பிராத்தித்து, திருமணமான பிறகு திருக்கல்யாண உற்சவமும் நடத்துவார்கள்.

News March 18, 2025

‘பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்’..மார்ச் 31 வரை அவகாசம்!

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் ‘பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்’ திட்டத்தின் கீழ் பதிவு செய்வதறகான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே பதிவு செய்யாதவுர்கள் ‘பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்’ திட்டத்தில் விரைந்து பதிவு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 18, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயணச் சலுகை அட்டை 

image

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயணச் சலுகை அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகின்ற 01.04.2025 அன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், 02.04.2025 அன்று மற்ற வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பேருந்து பயணச்சலுகை அட்டை புதிதாகவும் மற்றும் பழைய அட்டையினை புதுப்பித்தும் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

கோவையில் 200க்கும் அதிகமான விபத்துக்கள்

image

கோவை மாநகரில் ஜனவரி 1 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை, கோவை மாநகரில் 200க்கும் அதிகமான வாகன விபத்துக்கள் நடைபெற்றுள்ளது என தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த 2.5 மாத காலத்தில் நடைபெற்ற 249 விபத்துக்களில், 55 விபத்துக்கள் மிகவும் ஆபத்தான விபத்துகளாக இருந்துள்ளது. இதனால் இப்போது வரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். 223 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2025

கிருஷ்ணகிரியில் 2,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மலையின் மேற்குப் பகுதியில் 50 அடி உயரத்தில் 80 அடி நீளமான பாறையின் அடியில், மனிதன் தங்கிய அடையாளமாகப் பழமையான வெண் சாந்து பாறை ஓவியங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஓவியங்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

News March 18, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மையம் இணைந்து மார்ச் 22 அன்று திருப்போரூரில் உள்ள இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. 200+ நிறுவனங்கள் பங்கேற்று, 20,000 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, செவிலியர் உள்ளிட்டவர்கள் (18-40 வயது) கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு: 044-27426020. ஷேர் பண்ணுங்க.

News March 18, 2025

விழுப்புரத்தில் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

image

விழுப்புரத்தை சேர்ந்த காத்தமுத்து தனது தந்தை இறப்புச் சான்று பெறுவது தொடர்பாக மனு அளித்துள்ளார். இதற்காக நகராட்சி ஊழியர் மதன் பத்தாயிரம் லஞ்சம் கேட்ட போது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்ததின் அடிப்படையில் அவர்களின் அறிவுரைப்படி இன்று(மார்.18) பாண்டியன் நகரில் உள்ள மதனுடைய இல்லத்தில் காத்தமுத்துவை வரவழைத்து பத்தாயிரம் லஞ்சமாக வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

News March 18, 2025

திண்டுக்கல்: இன்று இரவு மழைக்கு வாய்ப்பு

image

திண்டுக்கல்லில் சில நாட்களாக சுட்டெறிக்கும் வெயில் நீடித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்தது. இந்நிலையில், இன்று(மார்ச் 18) இரவு 7:00 மணி முதல் மாவட்டத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அதீத கனமழையாக இருக்காவிடினும் இதனால் சாலை போக்குவரத்து சற்று பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

திருப்பத்தூரில் புத்தக திருவிழா

image

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வி துறை மற்றும் பொது நூலக இயக்கம் இனைந்து நடந்தும் 4ஆம் ஆண்டு புத்தக திருவிழா 22.03.2025 முதல் 31.03.2025 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 18, 2025

தி.மலை கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை நமிதா

image

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு கடந்த சில தினங்களாகவே திரைப்பட நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர்கள் இசையமைப்பாளர்கள் என பலரும் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் வருகின்றனர். இன்று நடிகை நமிதா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!