India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Junior Stenographer, Secretariat Assistant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 10 காலிபணியிடங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணபிக்க 28 வயது மிகாமல் இருப்பது கட்டாயம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 18-03-2025. 12ம் வகுப்பு முடித்த தகுதியான நபர்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை சம்பளம் கிடைக்கும். <
சென்னையில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினர் பா.ஜ.க. அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், அம்பேத்கர் சிலையை நோக்கி செல்ல முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே நேற்று முன்தினம் சரஸ்வதி என்ற 90 வயது மூதாட்டியை கொடூரமாக கொன்ற, அதே பகுதியை சேர்ந்த தாமோதரன், கோகுல்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், குடி மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இருவரும், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் தங்கத் தோடினை பறிக்க முயன்று, வலியால் கத்திய அவரை முகம், மார்பில் கண்மூடித்தனமாக தாக்கி கொன்றது தெரியவந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், புதிய குளம் உருவாக்கம், குளம் மற்றும் கால்வாய் துார்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, சித்தாமூர், மதுராந்தகம், திருப்போரூர், லத்துார் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 30 விவசாயிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
திருச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். பயிற்சியில் சேர மார்ச் 24ஆம் தேதிக்குள் <
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சேலம் மாநகரப் பகுதிகளில் பல்வேறு அளவுகளில் குழாய் உடன் கூடிய மண்பானைகள், சமையலுக்கு தேவையான மண்பானை சட்டிகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் மண்பானைகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரியையும், குடிநீர் கட்டணங்களையும் வரும் மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. வரியை செலுத்தத் தவறினால் குடிநீர் நிறுத்தம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <
அரசின் டாஸ்மாக் 1000 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சேலம் மாநகர முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதாக பாஜக அறிவித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், உள்ளிட்ட மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். குமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.