India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை அருகே பெருமூச்சி கிராம பேருந்து நிறுத்தம் அருகில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் எப்படி இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த மார்ச் மாதம் குழந்தை திருமணம் குறித்து 28 புகார்கள் வந்ததாகவும், விசாரணையில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவை தவறான புகார் என்றும் தெரிவித்தார்
▶️ மலைக்கோட்டை
▶️ பாம்பர் அருவி, கொடைக்கானல்
▶️ மல்லிகார்ஜுன சுவாமி கோயில், ஒட்டன்சத்திரம்
▶️ 108 விநாயகர் கோயில்
▶️ வெள்ளி மலை
▶️ புல்லாவெளி அருவி, ஆத்தூர்
▶️ தலையாறு அருவி, பழனி
▶️ பேரிஜம் ஏரி, கொடைக்கானல்
SHARE பண்ணுங்க திண்டுக்கல் மக்களே!
பள்ளி பயிலும் மாணாக்கர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க விளையாட்டு பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் சேர நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணாக்கர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். பதிவு செய்வதற்கான கடைசி தேதி 05 மே 2025. SHARE IT!
வேலூர் மாவட்டம் இலவம்பாடி கிராமத்தில் பயிர் செய்யப்படும் முள்கத்திரிக்காய் மிகவும் பிரபலம். இலவம்பாடி கத்திரிக்காய் என அழைக்கப்படும் இதன் சுவை காரணமாகவே பலரை விரும்ப வைத்துள்ளது. முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் முதல்வர் கருணாநிதி, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோரும் இதை விரும்பி சாப்பிட்ட பெருமை இலவம்பாடி கத்தரிக்காய்க்கு உண்டு. ஷேர் பண்ணுங்க
திருவண்ணாமலை தேவிகாபுரத்தில் அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அம்பாளை வழிபட்டுவிட்டு பின்னர் சிவனை வழிபடுகின்றனர். வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காக இக்கோயிலில் பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
நாகை மாவட்டத்திற்கு அருகே திருமணஞ்சேரியில் உத்தவாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான உத்தவாகநாதரை வழிபட்டால் வேலை வாய்ப்பு, தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மேலும் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி மன அமைதி என வாழ்வின் சகலமும் கைகூடும். வாழ்வில் எல்லாமும் கிடைக்க இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
தேனி மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்படும் நபர்களை மீட்டு உரிய நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து, உயிர் காக்க உதவி பணிபுரியும் நபர்களுக்கு, தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் மத்திய அரசிடம் இருந்து 5000 ரூபாய் மற்றும் மாநில அரசிடம் 5000 என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பைவிட115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே என்.எல்.சியை உடனடியாக மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.