Tamilnadu

News April 26, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு 1 கிலோ ரூ.88 என நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-26) நடைபெற்ற கூட்டத்தில், கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85 ஆகவும், அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 26, 2025

மேல்மலையனூருக்கு 65 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் சேவை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 35 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 15 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 15 பஸ்கள் என மொத்தம் 65 பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

News April 26, 2025

மதுரை: பூனையால் பறிபோன உயிர்

image

அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்ற இளைஞர் பூனை கடியால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் தான் சிகிச்சை பெற்று வந்த ரேபிஸ் வார்டில் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 26, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 26-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 26, 2025

கோவில் வெடி விபத்து – இபிஸ் கண்டனம்!

image

கஞ்சநாயக்கன்பட்டி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் கோயில் விழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலேயே இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது. அலட்சியப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு எனது கண்டனங்கள் என அவர் தெரிவித்துள்ளார்

News April 26, 2025

மதுபான கடைகளுக்கு விடுமுறை 

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  மே 1ஆம் தேதி  மதுபானக் கடைகளை  மூட மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 26, 2025

இரவு ரோந்தில் இருக்கும் போலீசார் பற்றிய தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காவலுக்கு இருக்கும் போலீசார் அவர்களைப் பற்றிய பெயர் குறிப்பு மற்றும் அலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ராணிப்பேட்டை பொதுமக்கள் எவையேனும் தேவை ஏற்பட்டால் நிச்சயமாக இந்த அலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் தகவலுக்கு மேலே உள்ள அட்டவணையை பார்க்கவும்.

News April 26, 2025

ஓமலூரில் கலெக்டர் ஆறுதல்

image

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

News April 26, 2025

கரூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

image

▶️ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்
▶️ வெண்ணெய்மலை முருகன் கோயில்
▶️ அரசு அருங்காட்சியகம், கரூர்
▶️ புகழிமலை, புகழூர்
▶️ பொன்னணியார் அணை
▶️ மாயனூர் கதவணை
▶️ அகஸ்தீஸ்வரர் கோயில், திருமுக்கூடலூர்
▶️ கடம்பவனேஸ்வரர் கோயில், குளித்தலை
கரூர் மக்களே SHARE பண்ணுங்க!

News April 26, 2025

விழுப்புரத்தில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் நகரத்தில் அமைந்துள்ள VRP மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற மே.10ம் தேதி மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு கலந்துகொள்ள உள்ளனர். இந்த முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!