Tamilnadu

News March 14, 2025

பெரம்பலூர் பெயர் காரணம் தெரியுமா?

image

இந்த ஊரில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அதிலிருந்து பல பொருள்கள் இந்த ஊர் மக்கள் தயாரித்து வந்ததாலும், இந்த ஊருக்கு பிரம்பலூர் என்ற பெயர் வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பல்லூர் என்னும் பெயரே பெரம்பலூர் என மாறியதாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு இந்த ஊர் பெயர் காரணம் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க. SHARE பண்ணுங்க.

News March 14, 2025

’கரூர்’பெயர் வந்தது எப்படி?

image

’கரூர்’ என்கிற பெயர் வந்ததற்கு ஒரு சுவாரஸ்ய புராண காரணம் உண்டு. பிரம்ம பகவானின் கர்வத்தை அடக்க படைப்புத் தொழிலை காமதேனுவிடத்து சிவபெருமான் தந்ததாகவும். அந்த நிகழ்வு நடந்த இடத்தை ’கருவூர்’ அதாவது, ’கரு – வூர்’ உலகின் ’கரு’ உருவான ஊர். அப்படியான நிகழ்வு நடந்த இடமே பசுபதீஸ்வரர் கோவில் என்பது புராணக் கூற்று.

News March 14, 2025

OTP எண் கேட்டு வரும் அழைப்புகளை தவிர்க்கவும் 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது: உங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கல்வி உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த OTP எண் தெரிவிக்குமாறு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சைபர் குற்ற உதவி 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

News March 14, 2025

தனிநபர் வருமானத்தில் செங்கல்பட்டு முதலிடம்

image

தமிழக பொருளாதார ஆய்வறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதில் கடந்த 2024 – 25ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 5.97 லட்சம் கோடி ரூபாய். மேலும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் முதன்மையானதாக செங்கல்பட்டு மாவட்டம் தனி நபர் வருமானத்தில் ரூ.6,47,962 ரூபாயில் உள்ளது. காஞ்சிபுரம் ரூ. 6,47,474 சென்னை மாவட்டம் ரூ.5,19,941 என முறையே 2, 3 இடத்தை பிடித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 14, 2025

கஷ்டங்களை நீக்கும் வக்ர காளியம்மன்

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருவக்கரை கிராமத்தில் வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு ராஜகோபுரத்தை அடுத்து உட்பகுதியில் இடப்பக்கமாக அருள்தரும் வக்கிரகாளிம்மன் சன்னதி உள்ளது. ஜாதகத்தில் வக்ர சனி, வக்ர குருவால் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறவர்கள் திருவக்கரை வக்ர காளியம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News March 14, 2025

திண்டுக்கல்: குழந்தை வரம் பெற இங்கே போங்க

image

திண்டுக்கல் வெள்ளி மலை உச்சியில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு தமிழ் மாத கடைசி வெள்ளி சிறப்பு வாய்ந்த நாளாகும். மேலும் இக்கோயிலில் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் அமாவாசை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் தங்கி, தீர்த்தகிணற்றில் நீராடினால், பிள்ளைபேறு கிடைக்கும். அதுமட்டுமல்லாது நோய்வாய்ப்பட்டவர்கள் மனஉளைச்சலில் தவிப்பவர்களுக்கு, இக்கோயில் தங்கி முருகனை வழிப்பட்டால் நலம் பெறுவார்கள்.

News March 14, 2025

சென்னையில் பிரபல ரவுடி ரூபன் கைது

image

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ரூபனை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரூபன் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் கைது செய்துள்ளனர். இவர் மீது 3 கொலை உட்பட 11 வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.

News March 14, 2025

திருத்தணி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

image

திருத்தணி அரசு மருத்துவமனையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. மகப்பேறு பிரிவு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வார்டில் இருந்த 11 பெண்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருத்தணி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க விரைந்து வந்து தீயை அனைதனர்.

News March 14, 2025

தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி கோயில்!

image

திருப்பூர் தாராபுரத்தில் மிகவும் பழமையாம காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன்துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம்.

News March 14, 2025

நம்ம ஊர்! நம்ம கோயில்!

image

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நாவலடி கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் எல்லா நாளுமே சுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. எனவே, இவருக்கென தனியே விழா எதுவும் கிடையாது. இவரிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தொடர்ச்சியாக படையல் படைத்து வழிபடுகின்றனர். எனவே, இவருக்கு ‘படையல்சாமி’ என்றொரு பெயரும் உண்டு. இங்கு பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.

error: Content is protected !!