India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பட்ஜெட்டில் இன்று ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஈரோடு மாநகராட்சியில் புதிதாக தொழில் தொடங்குவோர் மாற்றும் தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அருகிலுள்ள பெங்களூருவுக்கு இணையான வளர்ச்சியை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் டைடல் உயர் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் மையமாக மாறும் என தொழில் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 4 முதல் 27ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம், திருச்சி இடையே கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் விடியற்காலை 5.30 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு வழியாக 12:30 மணிக்கு தாம்பரத்தை அடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் 3:45 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40க்கு திருச்சி வந்தடையும். Share பண்ணுங்க
சேலம் : கடந்த 2017ம் ஆண்டு ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை டிபன் வாங்கித் தருவதாகச் சொல்லி அழைத்து முள்ளுக்காட்டில் வைத்து 4 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்தனர். இதுகுறித்து, தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட 4 பேருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (14.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலமாக தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் விற்பனையில், 2016-2021 வரை பல கோடி ரூபாய் மோசடி மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முறைகேடு நடந்த நாட்களில் பணியாற்றிய 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஜனவரியில் வழக்குப்பதிவு செய்தது. இதில், புதுக்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உட்பட 3 பேர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தாட்கோ மூலம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டியூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களைப் பெறுவதற்கு, தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்தல் விவசாயிகளின் பதிவு விவரங்களை மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய 31.03.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில் “திட்டம் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டத்தில் வருகிற மார்ச் 19- ம் தேதி நடைபெற உள்ளது .எனவே பொதுமக்கள் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 14) தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.