India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதும் ஐபிஎல் போட்டி, வரும் 23ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்குள், சமூக வலைதளங்களில் டிக்கெட் விற்பனை என வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், டிக்கெட் விற்பனையில் ரசிகர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.
சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் பால் நிறுவனங்கள் நவீனமயமாக்கப்படும். ஆவின் பால் நிறுவனங்களில் உள்ள சாதனங்களை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என 2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) நடைபெற்றது. இதில், பால், பால் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பையும், நுகர்வோருக்கு ஊட்ட சத்தையும் உறுதி செய்யும் வகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் பால் பண்ணைகளில் நவீன பால் அளவிடும் கருவிகள், பால் தகவல் சேகரிப்பான், நிலைக்காட்டி ஆகியவை நிறுவப்படும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர், வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மனித நேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டைனையை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
▶️ராமநாதபுரத்தில் ரூ.21கோடியில் நாவாய் அருங்காட்சியகம்
▶️ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரூ.122 கோடியில் புதிய தொழிற்பயிற்சி மையங்கள்
▶️தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம்
▶️ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம்
▶️ராமநாதபுரத்தில் புதிய மீன்படி இறங்குதளம்
▶️மீன் பிடி தடைக்கால மானியம் ரூ.8000 ஆக உயர்வு
உங்க ஊர் அப்டேட்ட உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
நாகர்கோவில் மாநகரில் மாநகர அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு தலைமையில் நேற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பாரதி மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் வடசேரி மீனாட்சிபுரம் பகுதிகளில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 126 கடைகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஒன்பது கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 10 கடைகளுக்கு ரூ.22500 அபராதம் விதிக்கப்பட்டது.
ஜனவரி 2025 முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையுடன் கூட்டாய்வுகள், சைல்ட் லைன் புகார்களின் அடிப்படையில் உணவு கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுமான பணிகளில் ஆய்வு செய்ததில் 2 குழந்தை தொழிலாளர்கள் 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு: கரூரில் தொழிலாளியாக வேலை செய்த ஒடிசாவைச் சேர்ந்த தண்டபாணி ஷபார் (30) என்பவரிடம் ஈரோடு ரயில் நிலையத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல் அவரைக் கொலை செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய கொலையாளியான அசாமைச் சேர்ந்த ராகுல் (24) என்பவர் தற்போது கைதாகியுள்ளார்.
இருப்பு பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கோயம்புத்தூர் -மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில் மார்ச் 15ஆம் தேதி கோவையில் இருந்து திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும், திருச்சியில் இருந்து மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படும். மறு மார்க்கத்தில் மயிலாடுதுறை கோயம்புத்தூர் ஜனசதாப்தி விரைவு ரயில் திருச்சியில் இருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் இடையே 167 கிமீ தூரத்திற்கும், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் இடையே 140 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் மித அதிவேக ரயில்வே அமைப்பினை உருவாக்கிட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.