India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (27-04-2025)
ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளில் இரவு நேரம் வந்த பணிகளுக்கு தினமும் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் ஏதேனும் பிரச்சினைகள் மற்றும் புகார்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறியயுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஏப் 27) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், ஒட்டன்சத்திரம்,பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 27-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதத்தின் கடைசி வாராந்திர கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இதற்கு குமரி மாவட்ட பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தாக்கியவன் கோழையா, வீரனா என்பது இந்தியாவின் கேள்வியல்ல? 26 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். என்ன செய்து கொண்டிருந்தது உளவுத்துறை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறதா மோடி அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் அகாடெமி இறகு பந்து பயிற்சி மையத்திற்கு வீரர்கள் தேர்வு நாளை (ஏப்ரல் 28) காலை 6:30 மணியளவில் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 12 வயது முதல் 20 வயதுக்குள் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 27) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (27.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல்27ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.