Tamilnadu

News March 11, 2025

பள்ளி மாணவர் மீது தாக்குதல் – தூத்துக்குடி காவல் துறை அறிக்கை

image

ஸ்ரீவை., அருகே 11ஆம் வகுப்பு மாணவன் கெட்டியம்மாள்புரம் பேருந்து நிறுத்தம் அருகில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மாணவரை தாக்கிய லெட்சுமணன் என்பவனையும், 2 இளஞ்சிறார்களையும் சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தியாகவும், பாதிக்கப்பட்ட மாணவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 11, 2025

திருப்பூரில் தபால் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருப்பூர் தலைமை தபால் நிலையம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு தபால் துறை வழங்கும் சேவைகளை பற்றி விவாதிக்க, குறைகள் இருந்தால் தெரிவிக்க, தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. தபால்துறை சார்ந்த யோசனை, புகார்கள் இருப்பின் வரும் 14ம் தேதிக்குள், ‘பட்டாபிராமன், தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் 641601’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News March 11, 2025

ஈரோடு-சாம்பல்பூர் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பு

image

சேலம் வழியே இயக்கப்படும் ஈரோடு-சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, சாம்பல்பூர்-ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311), நாளை 12-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 11, 2025

நாமக்கல்லில் நாளை முதல் சிறப்பு ரயில்

image

நாமக்கலில் இருந்து நாளை முதல் வரும் திங்கள் வரையிலான நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும், மாலை 5:25 மணிக்கு நாமக்கலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல 20672 பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்தலாம்.

News March 11, 2025

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சர்வதேச நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றுத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 11) லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், விட்டர் டீசல் ரூ.92.39 க்கும் விற்பனை.

News March 11, 2025

புதுச்சேரி கூட்டத்தொடரில் திமுக மற்றும் காங் வெளிநடப்பு

image

புதுச்சேரி சட்டப்பேரவை 15வது சட்டப்பேரவை 6வது கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது விவாதம் நடைபெற்றது. மேலும் ஃபெஞ்சல் புயலின் போது முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

News March 11, 2025

TNPSC இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்!

image

TNPSC குரூப்-1 தேர்வுகள் நடைபெற உள்ளதையொட்டி, இதற்கான இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நாளை(மார்ச் 12) தொடங்க உள்ளது, இதில் பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். விருப்பமுள்ளோர் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவு செய்துகொள்ள ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE IT.

News March 11, 2025

தமிழ் தெரிந்தால் அரசு வேலை! நாளை கடைசி நாள்

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நாளை வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பியுங்கள்

News March 11, 2025

தமிழ் தெரிந்தால் அரசு வேலை! நாளை கடைசி நாள்

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்.12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பியுங்கள்

News March 11, 2025

தமிழ் தெரிந்தால் அரசு வேலை! நாளை கடைசி நாள்

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்.12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்துவிண்ணப்பியுங்கள்

error: Content is protected !!