Tamilnadu

News March 11, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#மாலை 4 மணிக்கு ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு பென்ஷன் உயர்த்தி வழங்க வலியுறுத்தி குலசேகரம் சந்திப்போம் முன்பு எஸ்டேட் ஒர்க்கல்ஸ் ஆர்ப்பாட்டம்.#இன்று(மாரச் 11) மாலை 5:30 மணிக்கு வங்கியில் போதிய பணியாளர்களை நியமனம் செய்ய வலியுறுத்தி வெட்டூர்ணிமடம் ஐஓபி வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.#மண்டைக்காடு கோவிலில் 10ஆம் நாள் கொடை விழா நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடக்கிறது.

News March 11, 2025

“அதிக வட்டிக்கு ஆசைப்படாதீங்க”

image

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்கள் வருமானத்தை தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறாமல் அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெற வேண்டும். மாநில அளவில் சேலம் மாவட்டம் அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ.9,101.99 கோடி வசூலித்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 11, 2025

மதுரையில் நில அளவீடு இணையத்தில் விண்ணபிக்கலாம்

image

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்,தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி இணையவழியில் விண்ணப்பிக்கலாம். என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இந்த <>லிங்கை <<>>பயன்படுத்தலாம். நில சம்பந்தபட்ட தொழில் செய்பவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News March 11, 2025

கடலூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை பிற்பகல் 1 மணி வரை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 11, 2025

ஈரோடு: மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

image

ஈரோடு, ஈவிஎன் சாலையில் உள்ள தெற்கு கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை 12ம் தேதி காலை 11 மணி அளவில் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. ஈரோட்டில் உள்ள மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டார்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்

News March 11, 2025

நீலகிரி: PM Internship திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

image

நீலகிரி, இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இதை ஷேர் செய்யவும்.

News March 11, 2025

நாமக்கல்: PM Internship திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

image

நாமக்கல்: இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இங்கே<> கிளிக் <<>>செய்யவும். இதை ஷேர் செய்யவும்

News March 11, 2025

ஈரோடு: அரசு மருத்துவமனியில் சிறப்பு சிகிச்சை வார்டு

image

ஈரோடு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைக்கான வார்டு நேற்று ஆரம்பிக்கப்பட்டது. ஈரோட்டில் தினமும் 100*சி வெப்பம் பதிவாகுவதாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்ய்ப்பட்டதாக மருத்துவ அதிகாரி சசிரேகா கூறினார். 24 மணி நேரமும் இந்த வார்டில் இரண்டு டாக்டர் மற்றும் செவிலியர் பணியில் தொடர்ந்து இருப்பார்கள் என தெரிவித்தார். தரை தளத்தில் இந்த வெப்ப அலை வார்டு இயங்கும் என தெரிவித்தார்.

News March 11, 2025

கொடநாடு வழக்கு: Ex.பாதுகாப்பு அதிகாரி ஆஜர் 

image

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தற்போது காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

News March 11, 2025

தஞ்சை: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தஞ்சாவூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1 மணி வரை இந்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தி காலை முதலே ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது…SHARE NOW

error: Content is protected !!