India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை பிற்பகல் 1 மணி வரை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW
ஈரோடு மாநகராட்சியில் 2024-2025ம் நிதியாண்டிற்கான சொத்து வரி, குடிநீர் வரி, உள்ளிட்ட வரிகள் கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை வருகின்ற மார்ச் 31குல் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று வரிகளை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கிவருகின்றனர். 60 வார்டுகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பில் கலெக்டர்கள், ஊழியர்கள் வரி வசூல் செய்துவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(மார்ச் 11) பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. *1071 & லேண்ட்லைன் – 0461 2340101 & அலைபேசி- 94864 54714, 93840 56221* இதில் புகார்கள் மற்றும் உதவிகள் குறித்து கேட்டறியலாம். இது குறித்து தெரியாத உங்க நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் ஏப்ரல் மாத இறுதி தொடங்கி மே மாதம் வரை வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, சென்னை திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை ஏற்படக்கூடும். இதனால், பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசௌகரியமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
குமரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 11) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘TN ALERT’ செயலியின் வழியாக மழை விவரங்களை தெரிந்து கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை முதல் லேசானை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி கல்லூரி மாணவர்கள் நனைந்தபடி சென்றனர். மேலும், வேலைக்கு செல்லும் நபர்கள் கடும் சிரமம் அடைந்தனர். உங்க ஊரில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க. Share பண்ணுங்க
அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வினோத் இவர் +1 படிக்கும் மாணவியிடம் பேச்சு கொடுத்து கடந்த 7ல் ஆட்டோவில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததை அவரது தாய் கேட்டபோது, தனக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளார். மாணவியின் தாய் புகார்படி பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து ஆட்டோ டிரைவர் கைது செய்தனர்.
ஈரோட்டில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் கோமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சங்கரநாராயண சுவாமி கோவிலில் தட்டச்சர், உதவி பரிசாரகர், உதவி யானைப்பாகன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் கோவில் அலுவலகத்தில் இன்று(மார்ச் 11) முதல் ஏப்.4ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT.
ஆட்சியரகத்தில் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 582 பேரும், மாற்றுத்திறனாளிகள் 16 பேர் என மொத்தம் 598 மனுக்களை கொடுத்தனர். மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.