India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்கள் வருமானத்தை தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறாமல் அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெற வேண்டும். மாநில அளவில் சேலம் மாவட்டம் அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ.9,101.99 கோடி வசூலித்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்,தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி இணையவழியில் விண்ணப்பிக்கலாம். என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இந்த <
தமிழகத்தில் கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை பிற்பகல் 1 மணி வரை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு, ஈவிஎன் சாலையில் உள்ள தெற்கு கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை 12ம் தேதி காலை 11 மணி அளவில் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. ஈரோட்டில் உள்ள மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டார்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்
நீலகிரி, இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இங்கே <
நாமக்கல்: இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இங்கே<
ஈரோடு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைக்கான வார்டு நேற்று ஆரம்பிக்கப்பட்டது. ஈரோட்டில் தினமும் 100*சி வெப்பம் பதிவாகுவதாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்ய்ப்பட்டதாக மருத்துவ அதிகாரி சசிரேகா கூறினார். 24 மணி நேரமும் இந்த வார்டில் இரண்டு டாக்டர் மற்றும் செவிலியர் பணியில் தொடர்ந்து இருப்பார்கள் என தெரிவித்தார். தரை தளத்தில் இந்த வெப்ப அலை வார்டு இயங்கும் என தெரிவித்தார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தற்போது காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் தஞ்சாவூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1 மணி வரை இந்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தி காலை முதலே ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது…SHARE NOW
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் குமரி மாவட்ட திருக்கோயில்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட 83 கோவில்களில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக விளையாட்டு அணி அமைப்பாளருமான பிரபா ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.