India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“இந்தியை எதிர்த்துவிட்டு, நிதி ஆதாயத்திற்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதில் என்ன லாஜிக் இருக்கிறது?” என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த தூத்துக்குடி எம்.பி கனிமொழி, “மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க, தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது” என, பவன் கல்யாண் 2017 ல் இந்திக்கு எதிராக பேசியதை BEFORE BJP & AFTER BJP என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற சர்வமங்களா தேவி உடனமர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். திருமண தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க சிறந்த தலமாக பக்தர்களால் நம்பப்படுகிறது. பயன்பெறுங்க, தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
தற்போதைய சூழலில் பலருக்கும் குழப்பம்,மன அழுத்தம் இருந்து வருகிறது தீராத மன அழுத்தம் நீங்க தேனி மாவட்டத்தில் உள்ள இந்த கோவில்களுக்கு செல்லலாம். அனுமந்தன்பட்டியில் உள்ள அனுமன் கோவில், பெரியகுளம் கைலாசநாதர் கோவிகளுக்கு சென்று, அங்கு நடைபெறும் நித்ய பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் மன அழுத்தம் நீங்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது .
புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மதுபான தொழிற்சாலைகள் கொண்டு வருவதை முதலமைச்சர் ரங்கசாமி கைவிட்டு, ஜவுளி பூங்கா கொண்டு வருவதில் நாட்டம் காண வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் வலியுறுத்தி உள்ளார். இல்லையென்றால் மக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி தேசிய நலவாழ்வு குடும்பம் திட்டத்தின் கீழ் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு உளவியலாளர் (Psychologist) பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குழந்தை பருவ உளவியலாளர் அல்லது குழந்தை உளவியல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாதம் ஊதியம் 23,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <
நாகை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு அனைத்து வகையான கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. எனவே கடன் பெற தகுந்த ஆவணங்களுடன் தங்களது அருகாமையில் உள்ள வங்கிகளுக்கு சென்று பயன் பெற ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.
மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் வயது 33 மனைவியின் அஸ்வினி 32. கார்த்திக் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை வருகிறார். இந்த நிலையில் வீட்டில் மின் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்திய போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசின் சார்பில் இன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2025-26 அறிவிப்பின்படி, ரூ.6.16 கோடி மதிப்பீட்டில்
சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகமும், 51 நீர்வடிப்பகுதிகளில் 30,910 எக்டர் பரப்பில் தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டகளில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 10 ரவுடிகள் மற்றும் 1 பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் அடங்குவர். இதில் குறிப்பிடப்படும் படியாக மேலப்பிடாவூரைச் சேர்ந்த அய்யாசாமி என்ற கல்லூரி மாணவனை தாக்கிய நபர்களில் இருவர் மீது குண்டர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை களக்காட்டை சேர்ந்தவர் பாலம் கல்யாணசுந்தரம். சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். பாலம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் 40 ஆண்டுகளாக சமூக சேவையாற்றி தன் சொந்த பணத்தில் ரூ.30 கோடிக்கும் மேல் செலவழித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இவரை தன் தந்தையாக தத்தெடுத்தவர். அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் இந்தியா வருகையின் போது அரசு சாராமல் சந்திக்க நினைத்த நபரில் இவரும் ஒருவர். *ஷேர் பண்ணுங்க*
Sorry, no posts matched your criteria.