India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கோழிப்பாளையத்தில் நேற்று இரவு மைசூரில் இருந்து திருமண விழாவிற்காக 5 பேர் காரில் வந்திருந்தனர். திருமண விழாவில் இருந்து தேநீர் அருந்துவதற்காக புழிஞ்சூர் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், 20 அடி பள்ளத்தில் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். 3 பேர் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரதமரின் கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் நாமக்கல் மாவட்டத்தில் உடனடியாக தங்களுடைய கணினி பட்டா, ஆதார், கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகம் அல்லது பொது சேவை மையத்தினை அணுகி மார்ச் 31-க்குள் இலவசமாக பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செட்டிகுளம் கிராமத்தில் சுரேஷ் – 50 லாரி டிரைவர் இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என தெரிகிறது. இந்நிலையில் செட்டிகுளத்தில் உள்ள அவரது வயலுக்கு அருகே பூச்சிகொல்லி மருந்து குடித்து சுரேஷ் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இன்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு, மாவட்ட மைய நூலகத்தில் நாளை (மார்ச் 17) காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 2025 ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள், கணிதத்தில் நேரம் மற்றும் வேலை ஆகியவற்றிலிருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் இன்று ‘மது போதையில் பயணம் நொடியில் மரணம்’ பதிவினை பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வருகின்ற மார்ச் 19-ம் தேதி ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதால் ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
விராலிமலை சட்டமன்ற தொகுதி பெரிய குரும்பப்பட்டி ஸ்ரீ காயாம்பு அய்யனார் கோவில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் சின்ன கொம்பன், வெள்ளைக்கொம்பன் மற்றும் செவலைக்கொம்பன் ஆகியவை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், நிலுவை மற்றும் நடப்பாண்டு வரி இனம் மற்றும் தொழில் உரிம கட்டணத்தை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும். இதனை ஊராட்சி அலுவலகம், வரி வசூல் முகாம்கள், https://vptax.tnrd.gov.in என்ற போர்டல் மூலம் வரி செலுத்தி ரசீது பெறலாம். வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை மற்றும் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுமென கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பால் பேட்மிண்டன் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகியவை சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் மீண்டும் பால் பேட்மிண்டன் சங்க தலைவராக சட்டப்பேரவை தலைவர் செல்வம் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், செயலாளர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மார்ச்.15) ரோந்து பணி மேற்கொண்டனர். கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சிவமூர்த்தி என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 37 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சிவமூர்த்தியை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.