India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் வருமான வரித்துறை அலுவலகத்தில் மார்ச் 19ஆம் தேதி வருமான வரி சேவை மையம் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் திரைப்பட நடிகர் வைகை புயல் வடிவேலு கலந்துகொண்டு திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வருமான வரி உதவி ஆணையர் வேணுகுமார் தலைமையில் வருமான வரி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.*வடிவேலு ரசிகர்களுக்கு பகிரவும்*
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றிய விவாதித்தல் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல் ஆகியவற்றுக்கான கிராம சபை கூட்டம் மார்ச் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானத்தில் செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.97 லட்சம் கோடியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உருவெடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தனி நபர் வருமானத்தில், 6,47,962 ரூபாயாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
ஈரோட்டில் நாளை(மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை நீங்கலாக அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் பெற்று பயனடையுமாறு கேட்டுகொண்டுள்ளனர்.
டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் என்றால் அதிமுக ஒன்று பட வேண்டும். அதை அதிமுகவில் உள்ள 90 சதவீத நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்புகின்றனர். தொண்டர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து திமுகவை வீழ்த்த வேண்டும்” என கூறினார்
தேவதானப்பட்டி மூங்கிலணையில் வேண்டிய வரங்களை வாரி வழங்கும் கற்பக விருட்சமாய், பக்தர்களின் இன்னல்களை அகற்றி அரவணைக்கும் காமதேனுவாய் அருள்பாலிக்கிறாள் மூங்கிலணை காமாட்சி. பிள்ளை வரம், திருமணப் பாக்கியம், தொழில் முன்னேற்றம் வேண்டுவோர், மனமுருகி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கே வந்து அம்மனை வழிபடும்போது கௌளி ஒலித்தால் அப்போது, வேண்டியது நிச்சயம் பலிக்கும் என்பது நம்பிக்கை.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் மார்ச் 23, 24 தேதிகளில் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்தை கொண்டு வந்து இலவச பஸ் பயண சலுகை அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலத்திற்கு இந்த ஆண்டு 77 புதிய டவுன் பேருந்துகளும், 9 புதிய மப்சல் பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 19 பேருந்துகள் குமரி மாவட்டத்தை வந்தடைந்துள்ளன. இந்த புதிய பேருந்துகளை எந்தெந்த பகுதிகளில் இயக்குவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஓரிரு வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மலை மாவட்டம் பாடகம் பகுதியில் சக்திவேல் என்ற இளைஞர் காவல்துறையில் சேருவதற்காக தனியார் அகாடமியில் பயின்று வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. பின் இருவரும் பிரிந்த நிலையில், மீண்டும் சக்திவேல் அந்த பெண்ணை காதலிக்க தொடர்ந்து வற்புறுத்துள்ளார். அந்த பெண் மறுக்கவே அவரை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்ற சக்திவேல், இறந்த பின் உடலை கிணற்றில் வீசியுள்ளார்.
கரிசல் இலக்கிய கழகம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கோமல் சாமிநாதனின் “தண்ணீர் தண்ணீர்” என்ற நாடகமும், தாரிணி கோமலின் “திரெளபதி” என்ற பிரம்மாண்ட மேடை நாடகம் மார்ச்.15,16 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்தினால், ஏப்.12,13 அன்று இந்த நாடகக் குழுவினரால் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மேடை நாடகம் நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.