Tamilnadu

News March 17, 2025

ராணிப்பேட்டை காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு 

image

ராணிப்பேட்டை காவல் துறை இன்று (மார்.17)  வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில்  ஹேக்கர்களிடமிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாப்பதற்கான சிறந்த உதவிக்குறிப்புகள் வலுவான கடவுச்சொற்கள் அல்லது பயோமெட்ரிக்ஸை மென்பொருளை தொடர்ந்து புதுப்பிக்கவும் பொது வைஃபையுடன் கவனமாக இருங்கள் நம்பகமான பயன்பாடுகளை மட்டும் நிறுவவும் சந்தேகத்திற்குரிய இணைப்புகள் மற்றும் இணைப்புகளைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

News March 17, 2025

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (17.03.2025) பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ் உட்பட பலர் உள்ளனர்.

News March 17, 2025

தேனி காவலர் குடியிருப்பில் மீட்கப்பட்ட நல்ல பாம்பு

image

தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பாம்பின் நடமாட்டம் இருப்பதை கண்ட குடியிருப்பு வாசிகள் தேனியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பாம்பு கண்ணன் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பினை பத்திரமாக மீட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்தார்.

News March 17, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.17) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 17, 2025

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து,பொதுமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், தெரிவிக்கும் வகையிலான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை இன்று (17.03.2025) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

News March 17, 2025

திண்டுக்கல்: கிராம சபைக் கூட்டம் ; ஆட்சியர் அழைப்பு 

image

திண்டுக்கல்: அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்  வருகிற 23.03.2025 அன்று நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் தெரிவித்துள்ளார். 

News March 17, 2025

கோவை: குறை தீர்ப்பு கூட்டம் ரத்து

image

கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (மார்ச்.18) நடைபெற இருந்த மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சார்பில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 17, 2025

திண்டுக்கல்லில்: ரயிலில் ரூ.14 லட்சம் பறிமுதல்

image

திருக்குறள் விரைவு ரயிலில் திண்டுக்கல்லில் நடந்த சோதனையில் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய இன்றி ரூ.14 லட்சத்தை எடுத்துச் சென்ற நவநீதகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். கார் விற்பனை செய்துவரும் சென்னையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2025

பாட்டியை சுத்தியலால் அடித்து கொலை செய்த பேரன்

image

அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் பத்மநாபன்(26),பாட்டி சரஸ்வதி (85) மனநலம் பாதிக்கப்பட்டவர் இவரை இவரது பேரன் பத்மநாபன் வீட்டில் வைத்து பார்த்து வந்த நிலையில் இன்று காலை சரஸ்வதி வீட்டை விட்டு தப்பித்துள்ளார். இதில் மது போதையில் இருந்த பத்மநாபன் கோபமாகி சுத்தியால் சரஸ்வதி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சரஸ்வதி சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 17, 2025

ஈரோடு மாவட்டத்தில் 108 கிலோ கஞ்சா, 35 பேர் கைது

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில்,மட்டும் 108 கிலோ கஞ்சாவும்,35 பேர் கஞ்சா விற்பனை செய்து கைது செய்யப்பட்டனர். இதில் ஈரோடு ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு 200 பேருக்கும் மேல் சென்று வருகின்றனர்.கஞ்சாவை வெளிமாநிலங்களிலிருந்து, கேரளா பகுதியிலிருந்து கொண்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் மதுவிலக்கு மற்றும் அமலகத்துறை போலீசார் தீவிர வேட்டை நடத்தினர். 108 கிலோ கஞ்சா, 35 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!