Tamilnadu

News March 17, 2025

தீராத நோய்களை தீர்க்கும் மருந்தீஸ்வரர்

image

சென்னை திருவான்மியூரில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. தீராத நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து விபூதி பிரசாதம் உண்டால், தீராத நோய்கள், பாவங்கள் தீரும் அங்குள்ள வன்னி மரத்தை சுற்றி முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 17, 2025

அபூர்வ அகஸ்தீஸ்வரர் கோயில்

image

அரியலுார், மேலப்பழுவூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயில், அபூர்வ சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் வரலாற்றையும் தன்னகத்தே கொண்ட 1000 ஆண்டுகள் பழமையான கோயில். இங்கு, 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, சிவனே சிவனை சுமப்பது போன்ற காட்சியும், அனகோண்டாவை நினைவு படுத்தும் விதத்தில் மிகப்பெரிய மிருகங்களை விழுங்கும் பாம்பும் என பல கலையம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த கோயில் பற்றி எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 17, 2025

ஊரகப் பகுதியில் தொழில் தொடங்க நிர்ணய கட்டணம்

image

ஊரகப் பகுதிகளில் குறுந்தொழில், சிறு தொழில், இயந்திரங்கள் நிறுவுதல் ஆகிய பணிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்/ ஊராட்சிகளின் ஆய்வாளர் அவர்களின் அனுமதி பெற்று தொடங்க வேண்டும். தொழிற்சாலையின் பரப்பளவிற்கு ச. மீ கட்டணம் ரூ 150 நிர்ணயித்தும் தீயணைப்பு துறை அனுமதி, நகர் ஊரகத்துறை, இதர தொடர்புடைய துறைகள் அனுமதி மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்கள்.

News March 17, 2025

விழுப்புரத்தில் பணி நியமன ஆணை வழங்கல்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி -IV தேர்வில் தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.03.2025) வழங்கினார்.

News March 17, 2025

Way2News எதிரொலி: முத்துப்பேட்டை அருகே சாலை சீரமைப்பு

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் இருந்து மேலப் பெருமழை செல்லும் இணைப்பு சாலையானது கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையினால் மிகுந்த சேதமடைந்தது. இதுகுறித்து கடந்த மார்ச்.16 ஆம் தேதி Way2News-இல் செய்தி வெளியிடப்பட்டது. இதன் காரணமாக தற்போது சாலையோரத்தில் மண் மூட்டைகளை அமைத்து சீரமைக்கும் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். SHARE NOW!

News March 17, 2025

ரூபாய் 23,000 சம்பளத்தில் வேலை – அப்ளை பண்ணுங்க

image

தென்காசி தேசிய நலவாழ்வு குடும்பம் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு இயன்முறை மருத்துவர், பார்வை மருத்துவர், உளவியலாளர், ஒலியியல் நிபுணர், பேச்சு சிகிச்சை நிபுணர், ஆய்வக நுட்பனர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தென்காசி கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாதம் ஊதியம் ரூ-13,000 முதல் ரூ-23,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <>இங்கே <<>>க்ளிக் செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு *ஷேர் பண்ணுங்க*

News March 17, 2025

ஈரோட்டில் வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு சீல் வைப்பு

image

ஈரோட்டில் வாடகை செலுத்தாத மாநகராட்சிக்கு சொந்தமான 31 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 203 கடைகளில் ரூ.2கோடியே 23 லட்சம் அளவுக்கு வாடகை நிலுவை உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் வாடகை பாக்கி வைத்துள்ள 31 கடைகளுக்கு மாநகராட்சியின் ஆணையாளர் உத்தரவின் பேரில் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

News March 17, 2025

போடி: பரமசிவன் கோவில் சிறப்புகள் பற்றி தெரியுமா?

image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ளது பரமசிவன் கோவில். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் தலவிருட்சம் தரும் வேம்பு மரம் உள்ளது. சிவராத்திரி, திருக்கிருத்திகை, உள்ளிட்ட நாட்களில் இங்குள்ள வேம்பு மரத்தை வழிபட்ட பிறகு , இங்கு நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு மூலவரையும் ,உற்சவரையும் வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் செய்து உதவுங்கள் .

News March 17, 2025

கனடா அமைச்சரவையில் கோவை பூர்வீகமாக கொண்ட பெண்

image

கனடா புதிய பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் கோவையை பூர்வீகமாக கொண்ட பெண் அனிதா ஆனந்த் இடம் பெற்றுள்ளார். இவர் கனடாவின் அறிவியல் மற்றும் தொழில்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அனிதாவின் தந்தைவழி தாத்தா கோவை வெள்ளலூர் அன்னசாமி சுந்தரம் ஆவார். இவர் மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். கோவைக்கு பெருமை சேர்த்த அனிதா-க்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

News March 17, 2025

தூத்துக்குடி விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதம் தோறும் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 20 ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். *விவசாய நண்பர்களுக்கு பகிரவும்*

error: Content is protected !!