India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில், பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ‘தமிழ் மணக்கும் வார’ விழா நடந்தது. இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சியாளர்கள் ‘அ’ வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு, மண்டல இணைப்பதிவாளர் பரிசு வழங்கினார்.
குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் (54) மற்றும் விபின் குமார் (35) ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் இடப்பிரச்சினை தொடர்பாக குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சந்தைமேட்டை சேர்ந்தவர் குருநாதன். சித்தலூரை சேர்ந்த பரத் என்பவரிடம் வண்டியை அடமானம் வைத்து நண்பருடன் சேர்ந்து குடித்துள்ளார். பின்னர் அந்த வண்டியை தருமாறும், பணம் பின்பு தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்தால் மனஉளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நேற்று தியாகதுருகம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளார்.
சிவகங்கை: காரைக்குடி அருகேயுள்ள கல்லுவயலைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி பாண்டீஸ்வரிக்கும், ராஜாவின் சகோதரர் பாண்டிக்கும் இடம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டபோது, பாண்டி பாண்டீஸ்வரியை அடித்துள்ளார். தகவல் அறிந்து வந்த ராஜா, பாண்டியை ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கினார். காயமடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று சோமநாதபுரம் போலீசார் ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
சென்னையில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் வெப்பம் பதிவாவதால், வேலைக்கு செல்வோர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால், மக்கள் மதிய நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். நீங்களும், இந்த கோடை காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். பகல் 11 மணிக்கு மேல் வெளியே செல்வதை முடிந்தளவுக்கு தவிர்த்திடுங்கள். ஷேர் பண்ணுங்க
திருவண்ணாமலை, போளூர் தாலுகா மேல்பாலூர் காலனி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (40) மற்றும் கோபால் (39) இவர்கள் கடந்த 2008-ம் ஆண்டு 12 வயது சிறுமியை முட்புதர் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்த வழக்கு நேற்று திருவண்ணாமலை மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. அதில் ராஜ்குமார் க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கோபால் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
பண்ருட்டி பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (27). இவருடைய மனைவி ஜெனிதா (19). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. இவர் நேற்று ராசாப்பாளைம் -கட்டமுத்துப்பாளையம் சாலையில் டூவீலரில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப் பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள், தொழிலாளர் தினமான இன்று அனைத்து மதுபான கடைகளும் மூடப்படுகிறது. இன்று பார்கள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில் அந்த விபரத்தை 0423 -2223802, உதவி ஆணையர் 0423–2443693 ஆகியோருக்கு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
2024 – 2025ஆம் கல்வியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று (ஏப்ரல். 30 ) பாராட்டி வாழ்த்தினார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து 30.04.2025ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர்கள் லாரண்ஷ், ஆசைதம்பி, விஜயகுமார், இளங்கோ மற்றும் விருப்ப ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி, ஜான்பாபு ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்,IPS., நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.