India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயலட்சுமி, ஹமீதாபானு, ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விதிமுறைகளை மீறிய 273 வாகனங்களுக்கு அபராதமாக ரூ.27.14 லட்சம் விதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற உள்ள ஆசிரியர்கள்:
▶️ மகேந்திரவாடி பார்த்தீபன்
▶️ பூண்டி இளங்கோ
▶️ பூட்டுத்தாக்கு கோட்டீஸ்வரி
▶️ களர்குடிசை பழனி
▶️ நரசிங்கபுரம் ஷீலா
▶️ கீழ்விஷாரம் விஜயலட்சுமி
▶️ கீழ்வீதி சாரதி
▶️ சயனபுரம் இன்பராஜசேகரன்
நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஆசிரியர்களின் பெயர்களை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
சென்னை அண்ணா நூலக அரங்கில் இன்று நடைபெற்ற கல்வி துறை விழாவில், ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திருமதி எம். சித்ராவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
திருச்சி, சமயபுரம் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு 12.09.25ம் தேதிக்குள் விண்ணப்பம் வரவேற்கிறது. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 14 வயது முதல் 24 வரை இருக்க வேண்டும். மாணவர்களுக்கு ரூ.10 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஊக்க தொகை வழங்கப்படும். விபரங்களை https://samayapurammariamman.hrce.tn.gov.in/ இணையதளம், 0431 2670460 தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கலைஞர் நூலகம் வரும் 9-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டானின் திறந்து வைக்கிறார். மேலும், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பார்வையிட்டு விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
தமிழ்நாடு முழுவதும் 2013 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற நல சங்க தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆசிரியர் தினமான இன்று செப்டம்பர் 5 தமிழக அரசால் 12 ஆண்டுகள் மேலாக பணி வாய்ப்பு அளிக்கப்படாமல் உள்ளதை முன்னிட்டு இன்று கருப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மண்டலங்களை இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்படுவதாக மண்டல பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் வெயில் மழை போன்ற காலநிலை மாற்றம் சுகாதார குறைபாடுகளாலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் புறநகரில் 128 பேர் காய்ச்சல் பாதித்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணன் கூறும்போது 23 குழந்தைகள் 35 பெரியவர்கள் என மொத்தம் 58 பேர் காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சையில் உள்ளனர். ஏராளமான வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர் என்றார்.
தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணிகளுக்கான தேர்வுக்கான பயிற்சி தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 8 ந் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகர காவல் துறை வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாநகரத்தின் இன்று முதல் வருகின்ற 19ஆம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் கூட்டங்கள் நடத்துவதற்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் தடைகள் விதிக்கப்படுவதாக திருநெல்வேலி மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹடிமணி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.