Tamilnadu

News August 22, 2025

இருசக்கர வாகன பராமரித்தல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி!

image

இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள R.R திருமண மண்டபத்தில் இருசக்கர வாகனம் பராமரித்தல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி 30 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆக.30- க்கும் நேரில் வரவும். கூடுதல் விவரங்களுக்கு 0427 -2274478 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

News August 22, 2025

தென்காசி: ரூ.96,000 சம்பளத்தில் கூட்டுறவு வங்கியில் பணி

image

தென்காசி மக்களே; தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 (உதவியாளர் / மேற்பார்வையாளர் / எழுத்தர் / இளநிலை உதவியாளர்) பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.29ம் தேதி மாலை 05.45 மணி வரை. விருப்பமுள்ளவர்கள் லிங்கில் <>கிளிக்<<>> செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். *ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

தாம்பரம்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

News August 22, 2025

திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இன்று (ஆக. 22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10th, 12th, டிப்ளோமா மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9488466468 எண்ணில் அழைக்கலாம். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

ராம்நாட்டில் சிதைந்து கிடந்த ஆண் உடலால் பரபரப்பு!

image

ராமநாதபுரம்: சக்கரைகோட்டை ரயில்வே கேட் பகுதியில் நேற்று(ஆக.21) காலையில் ரயிலில் அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் முழுவதுமாக நசுங்கி, துண்டு துண்டாக முகம் சிதைந்து முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது. இறந்து கிடந்த நபர் யார்?, இது தற்கொலையா (அ) தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் கேணிக்கரை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

News August 22, 2025

அரியலூர்: 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

தா.பழூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் ரவி (45). கொத்தனாரான இவர், அதே பகுதியில் 3-ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவரை பள்ளியில் இருந்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். தனக்கு நேர்ந்து கொடுமை குறித்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்கவே, அவர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் ரவியை போக்சோவில் கைது செய்தனர்.

News August 22, 2025

கள்ளக்குறிச்சி: குழந்தை திருமணம்; கணவர் மீது போக்சோ

image

உளுந்தூர்பேட்டை அருகே 17 வயது பெண் தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரத்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஆண்டு குழந்தை திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஆகஸ்ட்-1ஆம் தேதி சிறுமிக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சரத்குமார் மீது உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று வழக்குபதிந்தனர்.

News August 22, 2025

சிவகங்கை:விமான படையில் வேலை – கலெக்டர் அறிவிப்பு

image

இந்திய விமான படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் நேரடி ஆட்சேர்ப்புக்கான தேர்வு சென்னையில் செப்., 2 ஆண்களுக்கும், செப்., 5 ல் பெண்களுக்கும் நடைபெறும்.விண்ணப்பிக்க 12th, தேர்ச்சி வேண்டும். பங்கேற்க 2026 ஜன., 1 அன்று 17.5 வயது முடிந்தும், 21 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். விபரத்திற்கு <>இங்கே க்ளிக் செய்து<<>> அல்லது சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனுகலாம். என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

News August 22, 2025

மயிலாடுதுறை: தந்தையை கொலை செய்த மகன்

image

செம்பனார்கோயில் காவல் சரகம் மேலபாதி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குடும்பத் தகராறில் அவரது மகனே அவரை கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து செம்பனார்கோயில் போலீசார் சிவகுமாரின் மகன் அபினேஷ் (25) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.

News August 22, 2025

விழுப்புரம்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!