India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நூலகத்தில் வரும் அக்.,26-ம் தேதி காலை 10:30 – 12:30 மணி வரை சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கான “பேசும் சித்திரம்” என்ற தலைப்பில் “ஓவியப்பயிற்சி” நடைபெற உள்ளது. வாசகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட முதலமைச்சரின் பயணம் மழையால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, அவர் அக்டோபர் 28 அன்று தூத்துக்குடி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தென்காசி செல்கிறார். 29 தென்காசியில் பங்கேற்று விட்டு மதுரை செல்கிறார். அக்.30 மதுரை கோரிப்பாளையம், பசும்பொன் ஆகிய இடங்களில் தேவர் குருபூஜையில் மரியாதை செலுத்திவிட்டு சென்னை திரும்புகிறார்.

PM-KISAN திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6,000 நிதி உதவி பெற, தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். இதை 21வது தவணை பெறுவதற்குள் விவசாயிகள் பெற வேண்டும். இதற்காக, விவசாயிகள் தங்கள் நில விவரங்களை அனைத்து வட்டாரங்களிலும் பதிவு செய்து (Farmer Registry), ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் இங்கு <

PM-KISAN திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6,000 நிதி உதவி பெற, தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். இதை 21வது தவணை பெறுவதற்குள் விவசாயிகள் பெற வேண்டும். இதற்காக, விவசாயிகள் தங்கள் நில விவரங்களை அனைத்து வட்டாரங்களிலும் பதிவு செய்து (Farmer Registry), ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் இங்கு <

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், அரக்கோணம், ஜோதி நகர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று(அக்.24) அப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள மழை, மழை பாதிப்புகள் குறித்து கீழே கமெண்ட் பண்ணுங்க!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.23) “RTO E-Challan எனும் பெயரில் Whatsapp இல் அனுப்பப்படும் போலி செயலி குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிணி(19) கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தார். இந்த நிலையில் மாணவி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்வதற்காக காந்திபுரம் வந்துள்ளார். அப்போது, தாறுமாறாக அரசு பேருந்து மோதியதில் இளம் பெண் பலியானார். இச்சம்பவத்தில் தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சுங்கம் கிளை-2 ஐ சேர்ந்த டிரைவர் மார்ட்டின் சஸ்பெண்ட் நேற்று செய்யப்பட்டுள்ளார்.

சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பொன்னுசாமி இறுதி சடங்கு இன்று அக்டோபர் 24ந் தேதி நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 2 மணிக்குள் கொல்லிமலையில் உள்ள அவரது தோட்டத்தில் உரிய அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் வனவிலங்கு நடமாட்டம் காரணமாக , வடகிழக்கு பருவமழையால் பழைய குற்றாலம் பகுதிகளில் அதிகளவு சேதம் ஏற்படுவதாலும், வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்கவும் பழைய குற்றாலம் அருவியை தேதி குறிப்பிடாமல் எந்த முன்னறிவிப்பு இன்றி மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (24.10.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்: வத்தலகுண்டு சேவுகம்பட்டி – கே.எஸ்.எம்.எம்.மஹால், சாணார்பட்டி – எஸ்.என்.மஹால் (ஊராட்சி அலுவலக எதிர்), நத்தம் – முத்தாலம்மன் திருமண மண்டபம், ஒட்டன்சத்திரம் – அரசு மேல்நிலைப்பள்ளி, பழனி – கோம்பைப்பட்டி கிராம அலுவலக வளாகம், வடமதுரை – பத்மாவதி மஹால் ஆர்.வி.எஸ் நகர்.
Sorry, no posts matched your criteria.