India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகரைச் சார்ந்த வழக்கறிஞர் முத்துராம் என்பவர் செய்துங்கநல்லூரிலுள்ள ஒரு மொபைல் கடையில் ஒரு மடிக்கணிணி வாங்குவதற்காக ரூபாய் 35,000ஐ அட்வான்ஸ் தொகையாக செலுத்தியுள்ளார். ஆனால் மடிக்கணினி வழங்காததால் ஏமாற்றமடைந்த நுகர்வோர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை சேர்த்து நீதிமன்றம் 15 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க இன்று உத்தரவிட்டது.
திருச்சி 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில், மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை (செப்.4) முதல் செப்.,15-ம் தேதி வரை புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. அடிப்படை மருத்துவ அறிவு, எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களுக்கு 91500 84161 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையின் சார்பில் மிக நீள பிளக்ஸ் வைக்கப்பட்டு அதில் 160 மற்றும் 165 என்ற எண்கள் மட்டும் அச்சிடப்பட்டு, அதில் Stay Tune for Update on 06.09.2025 வாசகம் மட்டும் இடம்பெற்றிருந்தது. இது எது சம்மந்தமாக இருக்கும் என பொதுமக்களிடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது என்னவென்றால் ஹெல்மெட் அணியாமல் சென்று இறந்தவர்களின் எண்ணிக்கை என்று காவலர்கள் கூறினர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா ரக நெல் விதைகள் மானிய விலையில் வேளாண்மைத்துறை சார்பில் விற்பனைக்கு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 2,000 கிலோ அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே உற்பத்தியை அதிகப்படுத்த விதை விநியோகத்துக்கு 50 சதவீதம் மானிய விலையில் கிலோவுக்கு ரூ.35 என்ற விலையில் கிடைக்கும். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
புதுவை, மத்திய அரசு விடுமுறை தினமான 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மிலாடி நபியை (முஹம்மது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு புதுச்சேரி மாநில ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று ஜிப்மர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க..!
போலியான ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் வழியாக குறைந்த விலையில் பொருட்கள் தருவதாகக் கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக செங்கல்பட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் மோசடிகளில் ஏமாற்றப்பட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி, கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவல் பணியிடங்கள் சுழற்சி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tnrd.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி:30.09.2025 . *ஷேர்
சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான அரசு சேவைகளை பெற நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டாம். பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், கடை வாடகை செலுத்துவது, செல்லப்பிராணிகளை பதிவு செய்வது, சொத்து வரி செலுத்துவது, தொழில் வரி செலுத்துவது, சமூக நல கூடங்களை புக் செய்வது, இறப்பு சான்றிதழ், மாநகராட்சி சார்ந்து புகார் செய்வது உள்பட 34 சேவைகளை <
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் 15 பேருக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் 13 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள இரு பேருக்கு சாதிய உள்நோக்கத்தோடு வட்டாட்சியர் துறை செல்வம் பட்டா வழங்க மறுத்து வருகிறார் என கூறி பாதிக்கப்பட்டோர் இன்று(செப்.3) திண்டிவனம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட தயாராக காத்திருந்தனர்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த மனு மீதான விசாரணை நடத்தினார். இந்த முகாமில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.