India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சக தொழிலாளி உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு நேற்று வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இது தொடர்பாக தொழிலாளர்கள் 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மின் வாரியத்தின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால், செப்டம்பர்-2025 மாதம் முழுவதும் திட்டமிட்ட நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும். மாவட்டத்தின் பல ஊரக, நகர்புற பகுதிகள் மின்தடைக்கு உட்படுகின்றன. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட கல்வித் துறை சார்பில் தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தும் கொள்ளும் வகையில் “தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு”வரும் 11.10.25 (சனி) நடத்தப்பட உள்ளது. தேர்வு மூலம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு கல்வித் துறை சார்பில் மாதம் ரூ.1500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பங்களை www.gov.in என்ற இணையதளத்தில் 04.09..25க்குள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்
தஞ்சை இளைஞர்களே மத்திய அரசின் தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள 248 காலிப்பணியிடங்களுக்கு நிரப்பப்படவுள்ளது. வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் கணினி அறிவியல்படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு. மாத சம்பளமாக ரூ.27,000 முதல் வழங்கப்படும். நீங்களும் இந்த பணிகளுக்கு எளிதில் விண்ணப்பிக்க 01.10.2025 தேதிக்குள் இங்கே <
கடலூா் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி வரும் செப்.5-ம் தேதி, மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளார். அரசு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர்<
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 3 நாட்களும் தலா 4 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மேற்கு மண்டலம்- சாய் தீப் திருமண மண்டபம் சாய்பாபா கோவில், கோவை மத்திய மண்டலம்- மாநகராட்சி மண்டபம் தர்மராஜா கோவில் தெரு கெம்பட்டி, மதுக்கரை நகராட்சி- மதுக்கரை நகராட்சி அலுவலக வளாகம், நம்பர் -4 வீரபாண்டி பேரூராட்சி – பொன் ராமசாமி கல்யாண மண்டபம், ஆனைமலை வட்டாரம்- காமாட்சி திருமண மண்டபம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம்- ஊராட்சி மன்ற அலுவலகம் பெரியநாயக்கன்பாளையம் இடங்களில் இன்று நடைபெறுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
▶️மனித உரிமைகள் ஆணையம் – 22410377
▶️போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
▶️போலீஸ் மீது ஊழல் புகார் SMS அனுப்ப – 9840983832
▶️கடலோர பகுதியில் அவசர உதவி-1093
▶️குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
▶️முதியோருக்கான அவசர உதவி -1253
▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
▶️ரத்த வங்கி – 1910
▶️கண் வங்கி -1919
▶️விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.