India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
▶️காலை 9 மணி இந்திய மருத்துவ சங்கம் சேலம் கிளையின் சார்பில் தர்ணா போராட்டம் சங்க கட்டிடம் முன்பு 5 ரோடு ▶️காலை 9 மணி ஓமலூர் கருக்கல்வாடி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு ▶️மாலை 6 மணி ராஜகணபதி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு சாமி ஊர்வலம்▶️
சென்னை வாசிகளே, உங்க ஏரியாவில் சாலை சேதம், தெரு விளக்கு, பூங்கா, கழிவுநீர் கால்வாய் சேதம், மழை நீர் தேங்கி இருக்கிறதா?. இதுகுறித்து உடனே வாட்ஸ்-அப்பில் புகார் அளித்து தீர்வு பெறலாம். இதற்கு உடனே போனில் “94450-61913” என்ற எண்ணை SAVE பண்ணிக்கோங்க. பின், உங்க புகாரை வாட்ஸ்-அப் பண்ணுங்க. உங்க கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற முக்கிய எண்ணை SHARE பண்ணுங்க.
ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
கோவையின் மையத்தில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. அருகிலேயே கோவை எஸ்பி அலுவலகம், சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கலெக்டர் அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டதில் புரளி என தெரியவந்தது. இந்த நிலையில் இன்று 3ஆம் முறையாக வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
நாகை செல்லூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (செப்.03) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில் நாகை நாகூர் திருமருகல் கீழ்வேளுர் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாபட்டினம், வாய்மேடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வுகாணலாம் என நாகை மின்வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.
ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவு. இதை மாற்ற ஒரு வழி இருக்கு சிவகங்கை மக்களே! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ₹3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இங்க <
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் TNPSC நடத்தும் குரூப் 1, குரூப் 4 உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில், போட்டி தேர்வு தயாராகுபவர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நாளை(செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️செட்டிமாங்குறிச்சி காளியம்மன் கோவில் மண்டபம் நாச்சிபாளையம்
▶️ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை
▶️அசிரா
மணி குள்ளம்பட்டி சமுதாயக்கூடம்
▶️ஓமலூர் சமுதாயக்கூடம் செங்கரடு
▶️ கெங்கவள்ளி கிருஷ்ணவேணி ராமலிங்க செட்டியார் திருமண மண்டபம் ஆட்டுக்காரன் வளைவு ▶️நங்கவல்லி ஆர் கே எஸ் திருமண மண்டபம் மூலப்புதூர்
சிவகாசி அருகே வெள்ளூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குடிநீர் குழாய் இணைக்கப்படுவதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால் இங்கு 4 முதல் 5 வீடுகளுக்கு ஒரே பகுதியில் குடிநீர் குழாயை இணைத்து நூதன மோசடியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு புகாரும் அளித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.