India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 29ம் தேதி வெள்ளிக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளார். ஆதனக்கோட்டை, அரிமளம், வாார்பட்டு, தேங்காய்த்தின்னிப்பட்டி இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் குறிப்பாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைதேடும் இளைஞர்கள் https://docs.google.com/forms/d/1-24fBqiePi3o9x78Z2mbm_yAf_-6uT2CyHux5wDU0yo/edit எனும் லிங்கில் பதிவிடவும். மேலும், விவரங்களுக்கு 9360557145-ஐ அணுகவும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
பெரம்பலூர் மாவட்டத்தில் (28-09-2025) இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எளம்பலூர் தந்தை ரோவர் உயர்நிலைப் பள்ளி, ஆதனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 15 துறைகள், 46க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோட்டில் பருவகால காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். 3 நாளுக்கும் மேலாக காய்ச்சல், இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வீடுகளுக்கு அருகில் தண்ணீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்கவும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று (ஆகஸ்ட் 27) சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 426 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 2 அடியிலிருந்து 10 அடி உயரம் வரை பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், சிலைகள் 4–5 நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மோகனச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாளை (29-08-2025) தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்ட அளவில் மேசைப் பந்து, கூடைப்பந்து போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்று மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
சேலம் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000 முதல் வழங்கப்படும்.இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு இன்ஜினியர் மாணவர்களுக்கு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
கொள்ளிடம் அருகே மயில கோவில் கிராமத்தில் பலர் வீடுகளில் நாய்கள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் ஆட்டு இறைச்சியில் குருணை மருந்தை கலந்து ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் வைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வளர்ப்பு மற்றும் தெருநாய்கள் என மொத்தம் 20 நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.