Tamilnadu

News August 25, 2025

காணொளி காட்சியில் சிலைகளை திறந்து வைத்த CM ஸ்டாலின்

image

தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் நேற்று (24.8.2025) மாலை காணொளி காட்சி வாயிலாக ஈரோடு சம்பத் நகரில் நூலகத்துடன் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி குமரன் சிலையையும், சொல்லின் செல்வர் ஈ.வி .கே .சம்பத் திரு உருவச் சிலையையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News August 25, 2025

சென்னை: இனி What’s App-லயே எல்லாம்! SUPER NEWS

image

சென்னை வாசிகளே அரசு சேவைகளை பெற சென்னை மாநகராட்சி சூப்பர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சொத்து வரி, தொழில் வரி, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு போன்ற 35 சேவைகளை What’s Appலயே பெறலாம். இதற்கு ‘9445061913’ என்ற எண்ணுக்கு ‘Hi” னு SMS பண்ணுங்க. பின் மாநகராட்சியின் சேவைகளை அதில் பெற்றுக்கொள்ளலாம். (SHARE)

News August 25, 2025

தேனி: அரசு அச்சுத்துறையில் வேலை…ரூ..71,900 சம்பளம்

image

தேனி இளைஞர்களே, தமிழக அரசின் அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பத்தை பதிவிறக்கி 19.09.2025க்குள் படிவத்தில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அரசு வேலை பெற நல்ல வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க.

News August 25, 2025

தி.மலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 29 காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 8ம் வகுப்பு முதல் உயர் கல்வி முடித்தவர்கள் கல்விச்சான்றுகள், ஆதார், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

News August 25, 2025

விதிமீறிய 508 பேரின் டிரைவிங் லைசன்ஸ் ரத்து

image

சேலம் தர்மபுரியில் கடந்த 7 மாதத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 508 பேர் லைசன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சேலம் தர்மபுரியில் விதிமுறைகளை மீறி வாகனம் இயக்குவோர் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தியவர்கள் என 508 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துறை அதிகாரிகள் தகவல்!

News August 25, 2025

விருதுநகர்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

image

விருதுநகர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.SHARE பண்ணுங்க

News August 25, 2025

திருப்பூரில் நூற்றாண்டு கண்ட மூதாட்டி!

image

திருப்பூர்: கே.செட்டிப்பாளையத்தில் அன்னபூரணி என்ற மூதாட்டியின் நூறாவது பிறந்தநாள் விழா குடும்ப சங்கமமாக நடைபெற்றது. 6 மகன்கள், 7 மகள்கள், 97 பேரன், பேத்திகள் பங்கேற்று, ஒரே மாதிரி உடை அணிந்து, அன்னபூரணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

News August 25, 2025

தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

image

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <>இங்கே க்ளிக் <<>>பண்ணி நாம் செல்லும் ஊர்களுக்கான பேருந்து நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க. SHARE பண்ணுங்க.

News August 25, 2025

வேளாண் சுயதொழில் தொடங்க வாய்ப்பு

image

புதுச்சேரி அரசு வேளாண் & விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில், வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

News August 25, 2025

புதுச்சேரி: காவல்துறையில் வேலைவாய்ப்பு

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 உதவி காவல் ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற செப்டம்பர் 12ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!