India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (அக். 25) நடைபெற உள்ளது. ஆகையால் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, சுசீந்திரம், கீழமனக்குடி, சின்ன முட்டம், சுவாமிதோப்பு, அஞ்சுகிராமம், தேரூர், மருங்கூர், புதுக்கிராமம், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். SHARE!

கடலூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குழுவினரால், போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு 4 சக்கர வாகனம், 26 இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலமானது வருகிற அக்.30-ம் தேதி கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் காலை 8 மணி முதல் 10 மணி வரை வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேப்பிராமங்கலம் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (45). இவர் கடந்த 21-ம் தேதி மாலை 5 மணி அளவில் வீட்டின் சந்து வழியாக கொல்லைப்புறத்திற்கு சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து எதிர்பாராத விதமாக ரேவதியின் மேல் விழுந்துள்ளது. இதில் காயம் அடைந்து சிகிச்சையில் இருந்த ரேவதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு & பயிற்சித் துறை சார்பில் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்காக புதிய கணினி ஆபரேட்டர் & ப்ரோகிராமிங் அசிஸ்டன்ட் (COPA) தொழிற்பயிற்சி பிரிவில் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் 10ஆவது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சேர்க்கை ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 04344-262457, 6374271245 அழைக்கவும்.

தென்காசி மாவட்ட முதல்-அமைச்சரின் பயணம் மழையால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, அவர் அக்டோபர் 28 அன்று தூத்துக்குடி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தென்காசி செல்கிறார். 29 அன்று தென்காசியில் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். தென்காசி மக்களே உங்க பகுதிகளில் எதும் குறைகள் இருந்தால் முதல்வரிடம் மனு அளிக்க தயாராகுங்க…!

நத்தம் அருகே செந்துறை முடிமலை ஆற்றுப்பாலத்தில் நேற்று டூ-வீலர்கள் மோதிய விபத்தில் முருகானந்தம் (51) சம்பவ இடத்தில் பலியானார். எதிரே வந்த பகவதி (19), சசிக்குமார் (20) பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து, முருகானந்தம் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இராமநாதபுரத்தில் வருகின்ற 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடக்கவிருக்கும் நிலையில், அந்த குருபூஜையில் கலந்து,ஐயா முத்துராமலிங்க சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இராமநாதபுரம் வருகை புரிய உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற அக்-28 தென்காசி சென்று அரசு நிகழ்ச்சியில் கலந்து பின், மதுரை சென்று அங்கு தங்கி, கார் மூலம் ராமநாதபுரம் செல்வதாக கூறப்படுகிறது.

ஆண்டிசெட்டிப்பாளையம் துணை மின்நிலையம், ராஜபுரம் துணை மின நிலையம், ரெங்கநாதபுரம் துணை மின் நிலையம், தென்னிலை துணை மின் நிலையம்,நொய்யல் துணை மின் நிலையம் ஆகிய துணை மின்நிலையம் இன்று மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!

திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு “Get unlimited internet offer send the 5 digit code to the no. 95xxxxxxxx.” இதுபோன்ற குறுஞ்செய்திகள் வந்தால் ஒடிபி எண்ணை பகிர வேண்டாம் மோசடி பேர்வழிகள் இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்து பண மோசடி செய்யலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

காரைக்காலில் 8-ம் வகுப்பு மாணவன் பாலமணிகண்டன் என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு பள்ளி நிகழ்ச்சியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற வழக்கில், சகாய ராணி விக்டோரியா என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை காரைக்கால் மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.