Tamilnadu

News April 19, 2025

ராணிப்பேட்டையில் ஆதி மனிதர்களின் ரகசிய கல்குகை

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆதிமனிதர்கள் வசித்த கல்குகை ஒன்று அமைந்துள்ளது. இங்கு செல்ல அடர்ந்த காட்டை கடக்க வேண்டும். சோளிங்கர் பெரிய மலைக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இந்த குகையில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இது திருடன் குகை எனவும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் முழுக்க முழுக்க கற்களால் இந்த குகை கட்டப்பட்டுள்ளது. ட்ரெக்கிங் செல்ல இது ஒரு சிறந்த இடமாக உள்ளது.ஷேர் செய்யுங்கள்

News April 19, 2025

முதியவரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கைது

image

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே கரிசல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி 62. இவரை வீடு தேடிச் சென்று நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி ஓடினர். குற்றவாளிகள் பாலாஜி, பாலமுருகன், சுபாஷ், சந்தோஷ் ஆகிய நான்கு பேரை அச்சன்புதூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News April 19, 2025

AC புறநகர் ரயில் சேவை தொடங்கியது

image

சென்னையில் முதல்முறையாக AC வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை இன்று (ஏப்ரல் 19) தொடங்கியது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை முதல் AC ரயில் இன்று புறப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணி, பிற்பகல் 3.45 மணி, இரவு 7.35 மணிக்கு இந்த AC ரயில் சேவை இருக்கும். இன்று காலை 7 மணிக்கு புறப்பட்ட AC ரயில் 8.45 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். ஷேர் செய்யுங்கள்

News April 19, 2025

தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது

image

கெலமங்கலம் அடுத்த கோவிந்தபள்ளியை சேர்ந்தவர் சரவணன் மனைவி அம்பிகா. தற்காலிக சத்துணவு சமையலராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி, தன் கணவர் சக்திவேலுவுக்கும், அம்பிகாவிற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அஸ்வினி, கோவிந்தப்பள்ளி பகுதியில் வைத்து அம்பிகாவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் அஸ்வினியை கைது செய்தனர்.

News April 19, 2025

பூமாதேவியின் சினத்தை தணித்த பூமிபாலகர் ஆலயம் 

image

மகாவிஷ்ணு லட்சுமியுடன் தாமிரபரணி நதிக்கரையில் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட நாரதர் பூமாதேவியிடம் கலகம் மூட்ட உடனே பூமாதேவி பாதாள உலகில் மறைய உலகம் நீரின்றி வறண்டது. இதை கண்டு அஞ்சிய தேவர்கள் திருமாலிடம் முறையிட திருமால் பூமாதேவியை சமாதானம் செய்து திருமகளும், நீயும் சமமானவர்களே எனக்கூற பூமாதேவியும் தவறை உணர்ந்தார். பூமிதேவியின் சினத்தை தணித்ததால் பூமிபாலகர் என்றும் காய்சினிவேந்தர் திருநாமம் பெற்றார்.

News April 19, 2025

21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம்

image

தமிழகவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் வரும் 23ஆம் தேதி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும். இந்த முகாமில் தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து ஜிம்னாஸ்டிக் குத்துச்சண்டை ஆகியவை, 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறந்த அரசு பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர்வதற்கு அண்ணா விளையாட்டு அரங்கில் பதிவு செய்ய வேண்டும்.

News April 19, 2025

நாமக்கல்லில் அடுத்தடுத்து மழை பெய்யும்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(ஏப்.19) 5 மி.மீயிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 8 மி.மீ.யிலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 4 மி.மீ.யிலும் முதல் 8மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க.

News April 19, 2025

கரூர்: வீடு புகுந்து செயின் திருடியவர்கள் கைது !

image

கரூர்: வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி(60) இவர் கடந்த, ஏப்.15ஆம் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த 6 அரை பவுன் செயின் திருடபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கொடுமுடியைச் சேர்ந்த கணேசன், துரை ராஜ் ஆகிய இருவரையும் நேற்று(ஏப்.14) கைது செய்தனர்.

News April 19, 2025

சிறுமிகளுக்கு சர்ச் பாதிரியார் பாலியல் தொந்தரவு

image

மண்டபம், கோயில்வாடி புனித அருளானந்தர் சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்தவர் ஜான் ராபர்ட் (46). இவர் 2022ம் ஆண்டு வழிபாட்டிற்கு வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். குழந்தைகள் நலக்குழுவின் புகாரில் போக்சோ வழக்கில் ஜான்ராபர்ட்டை கைது செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் ஜான்ராபர்ட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

News April 19, 2025

நாகர்கோவில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு 

image

நாகர்கோவில் நெல்லை ரயில் பாதையில் மறுகால் குறிச்சி தண்டவாளப்பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் காயங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது, தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!