Tamilnadu

News August 23, 2025

திருச்சி: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

image

▶️ திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0431-2415031
▶️ மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️ விபத்து உதவி எண் – 108
▶️ காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️ தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News August 23, 2025

ஈரோட்டில் அதிகளவில் மது குடித்தவர் உயிரிழப்பு

image

ஈரோடு முனிசிபல் சத்திரத்தை சேர்ந்தவர் சேகர் (60).சேகருக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த 20ம் தேதி மாலை சேகர், ஈரோடு சென்னிமலை சாலையில் மதுபோதையில் மயங்கிக்கிடந்தார். இதன்பேரில், சேகரின் குடும்பத்தினர், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News August 23, 2025

ECR சாலையில் மீனவர்கள் சாலை மறியல்

image

காலாப்பட்டில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாத இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் புதுச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

News August 23, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.!

image

வாழ்த்துக்கள்! உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது, ஆனால் இந்த வேலைக்கு சேர 50,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்” போன்ற குறுந்தகவல்கள் வந்தால் நம்ப வேண்டாம். இப்படிப் பட்டவை அனைத்தும் மோசடி செய்திகளாகும். பகுதி நேர வேலை, ஆன்லைன் வேலை என்ற பெயரில் முன்பணம் அல்லது முதலீடு கோரும் யாரையும் நம்ப வேண்டாம். பணம் செலுத்தினால் மீட்க இயலாது. அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தல்.

News August 23, 2025

சிவகங்கையில் கட்டணமின்றி வக்கீல் வேண்டுமா?

image

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04575-242561 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756 இந்த எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE IT.!

News August 23, 2025

திண்டுக்கல்லில் மின் தடை அறிவிப்பு

image

திண்டுக்கல்: அங்குநகர் துணை மின்நிலையத்தில் வருகிற ஆக.25ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9:00 – மாலை 2:00 மணி வரை, திண்டுக்கல் நகர் முழுவதும், எம்.எம்.கோவிலூர், பாலகிருஷ்ணாபுரம் தாடிக்கொம்பு, செட்டிநாயக்கன்பட்டி, பொன்மாந்துறை, சீலப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2025

காஞ்சிபுரம்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

காஞ்சிபுரம் மக்களே, இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? இதற்கு தமிழக அரசின் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

தருமபுரி: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

image

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து செப். 21க்குள் விண்ணப்பிக்கலம். செம்ம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் பண்ணுங்க.

News August 23, 2025

விருதுநகரில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

image

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. ஷேர் பண்ணுங்க.

News August 23, 2025

சென்னை: 10ஆம் வகுப்பு போதும்! அட்டகாசமான அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை கீழ் இயங்கும் அச்சு மையங்களில் காலியாக உள்ள Junior Electrician, Assistant Offset Machine Technician, Junior Mechanic உள்ளிட்ட 56 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு ஏற்ப ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் உள்ள <>படிவத்தை <<>>பூர்த்தி செய்து செப்.19குள் அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!