Tamilnadu

News April 15, 2024

சித்ரா பௌர்ணமி: ஆலோசனை

image

சித்ரா பௌர்ணமியையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 15, 2024

நாகை: ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கலந்தாய்வு

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் ஏப்ரல். 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஜானிடாம் வர்கிஸ், காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் இரா பேபி உடன் உள்ளார்.

News April 15, 2024

மன்னார்குடி போலீசாருக்கு எஸ்பி அட்வைஸ்

image

மன்னார்குடி :சட்டமன்ற தொகுதி காவல் ஆளிநர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படும் காவல் ஆளினர்களுக்கு , வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் இன்று அறிவுரை வழங்கினார.

News April 15, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் படைவீரர்கள் சீலப்பாடி(திருச்சி சாலையில் அமைந்துள்ள ) ஆயுதப்படை மைதானத்தில் தங்களது அடையாள அட்டை மற்றும் படை விலகல் சான்றுடன் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 9 மணிக்கு நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டார்.

News April 15, 2024

சிறப்பு அஞ்சல் வாக்குப்பதிவு நீட்டிப்பு

image

மக்களவைத்  தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை அரசு அலுவலர்களும், தங்களது அஞ்சல் வாக்கினை செலுத்துவதற்கு ஏதுவாக  வரும் நாளை வரை சிறப்பு அஞ்சல் வாக்குப்பதிவு  நீட்டிக்கப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

புதுச்சேரி : வெடி பொருள்கள் விற்பதற்கு தடை

image

புதுச்சேரி தோ்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்ட செய்தியில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கவும், விற்பதற்கும் வழங்கப்பட்ட உரிமங்கள் வரும் ஏப்ரல்.17-ஆம் தேதி முதல் ஏப்ரல்.20-ஆம் தேதி வரையிலும், ஜூன் 2-ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையிலும் தற்காலிமாக தடை செய்யப்படுகிறது. மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

நாமக்கல்: தபால் வாக்குப் பதிவு ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மக்களவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் உமா தேர்தல் பார்வையாளர் ஹாகுன்ஜித்கௌர், முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான தபால் வாக்கு பதிவு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 15, 2024

மதுரை மக்களுக்கு ஆட்சியர் “அலர்ட்”

image

கோடை வெயில் தற்பொழுது அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுக்காப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி கோடை வெயில் மற்றும் அனல் காற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மதிய வேளையில் குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

News April 15, 2024

பழனி கிரிவலப்பாதை:  நீதிமன்றம் உத்தரவு

image

பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது. 

News April 15, 2024

தூத்துக்குடி: வாக்களிக்க விடுமுறை

image

1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 135ன் படி இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தொழிலாளர் துறை அறிவுரைகளின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!