Tamilnadu

News April 25, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் அரியலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

எட்டு வடமாநில வாராந்திர ரயில்கள் ரத்து

image

திருப்பூரில் தண்டவாள பராமரிப்பு காரணமாக கோவை , திருப்பூர் , ஈரோடு வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் எட்டு வாராந்திர ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.இந்த ரயில்கள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

News April 25, 2024

ஈரோடு : விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

image

ஈரோடு மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, 3 மையங்களில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இந்த பணியில் 1,320 ஆசிரிய-ஆசிரியைகள் ஈடுபட்டனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று நிறைவுபெற்றது. இன்று (24ஆம் தேதி) முதல் மதிப்பெண்கள் கணினி மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற உள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சம்பத் தெரிவித்தார்.

News April 25, 2024

அரியலூர்: ஆட்சியர் வேண்டுகோள்

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும் கோடைகால நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

image

பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அருண்பாண்டியன், அருள்குமார், வசந்தகுமார் உள்ளிட்ட மூவரும் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி வியூ பாயிண்ட் சென்றுள்ளனர். அங்கு காரில் வந்த கும்பலுக்கும், இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த கும்பல் மூவர் மீதும் காரை ஏற்றியதில் பாண்டி பலியானார். இவ்வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்திரசிங் உட்பட 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News April 25, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் வேண்டுகோள்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று வெப்ப அலை வீச கூடும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தேவை என்று வெளியில் சுற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் இளநீர் தண்ணீர் ஆகியவற்றை அதிகம் பருக வேண்டும் வெயிலில் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

வேலூர் மாவட்ட‌ மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி இன்று (ஏப்ரல் 24) வேலூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்ரல் 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

சென்ட்ரலில் தற்கொலை.. தொடரும் விசாரணை

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் நேற்று(ஏப்.23) இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தாயார் இறந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சரளாவுக்கும் அவரது கணவனுக்கும் இடையே பல நாட்கள் பிரச்னை இருந்து வந்ததாகவும் தகவல்.

News April 25, 2024

நெல்லை அருகே 2 பெண்கள் கைது

image

கடையம் அருகே மயிலப்பபுரத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சேர்ந்தமரத்தை சேர்ந்த பால்தாய் என்பவர் தனியார் பேருந்தில் வந்தபோது அவரிடம் 500 ரூபாய் பிட்-பாக்கெட் அடித்துள்ளனர். இது தொடர்பாக பங்களா சுரண்டை பகுதியை சேர்ந்த அஞ்சலி(25), பவானி(24) ஆகிய இருவர் மீதும் கடையம் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து இன்று கைது செய்தார்.

News April 25, 2024

டன் கணக்கில் குவிந்த குப்பைகள்!

image

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் இருக்கும் வைபவத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் நள்ளிரவு முதல் 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!