Tamilnadu

News June 29, 2024

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஜமாபந்தி காரணமாக கடந்த சில நாட்களாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News June 29, 2024

முதுமலை யானைகள் முகாமில் குட்டி யானை உயிரிழப்பு

image

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. அங்குள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் மருதமலை பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண் குட்டி யானை பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. இந்த நிலையில் குட்டியானைக்கு நேற்று (ஜூன் 28) உடல்நல குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுமார் 8.45 மணி அளவில் குட்டி யானை உயிரிழந்தது.

News June 29, 2024

ராணுவ பயிற்சி பள்ளியில் நிர்வாக குழு கூட்டம்

image

உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் சைனிக் எனப்படும் ராணுவ பயிற்சி பள்ளி உள்ளது. பள்ளியில் நேற்று நிர்வாக குழு கூட்டம் தெற்கு கடற்படை தளபதி சைனிக் பள்ளி நிர்வாக குழு தலைவர் வைஸ் அட்மிரல் சீனிவாஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பள்ளியில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் தற்போது உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News June 29, 2024

கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம்

image

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.70 முதல் ரூ.90 வரையிலும், உருளைக்கிழங்கு ரூ.25 முதல் ரூ.42 வரையிலும், பீன்ஸ் ரூ.75 முதல் ரூ.90 வரையிலும், சவ்சவ் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், முள்ளங்கி ரூ.32 முதல் ரூ.35 வரையிலும், வெண்டைக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும் விற்கப்படுகிறது.

News June 29, 2024

கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

image

கரூர் மாவட்டம் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் சட்ட விரோதமான முறையில் மணல் கடத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக மணல் கடத்தல் நடைபெறும் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News June 29, 2024

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

image

சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலையில் 3 அறைகள் சேதமடைந்துள்ளது. விபத்தில் மேலும் சிக்கியுள்ள சிலரை, தீயணைப்பு துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News June 29, 2024

தற்காலிக ஆசிரியர் பணி; கலெக்டர் அறிவிப்பு

image

குமரி மாவட்டம் கலிங்கராஜபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் வேதியியல் முதுகலை பட்டதாரி தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வி தகுதி உடையவர்கள் ஜூலை 5க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

News June 29, 2024

தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உதவித்தொகை

image

புதுவை சுகாதாரத்துறை சார்பு செயலர் முருகேசன் நேற்று அனைத்து மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய உத்தரவில்,புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மற்றும் உறைவிட பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை போல் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் உதவித்தொகை வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.

News June 29, 2024

அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு சிறப்பு வசதி!

image

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிா் காக்கும் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் தொடங்கப்படும் என நேற்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதன் மூலம் ஏழை எளிய மக்கள் இந்த நவீன சிகிச்சைகளை எளிதாக பெற முடியும் என மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தர்மராஜ் நம்பிக்கை தெரிவிதுள்ளார் .

News June 29, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை தேதி மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் 412 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 30 ஆம் தேதி நடைபெற இருந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஜூலை 2ஆம் தேதி நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 2024-25 ஆம் ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயரை கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டி கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.

error: Content is protected !!