Tamilnadu

News March 26, 2024

இவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் – வனத்துறை எச்சரிக்கை

image

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறிய மூவர் கடந்த இரு தினங்களில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இதயக்கோளாறு , ஆஸ்துமா, ரத்த கொதிப்பு இருப்பவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News March 26, 2024

திருநெல்வேலி வேட்பாளரை அறிமுகம் செய்த முதல்வர்

image

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் அருகே நேற்று (மார்ச் 25) மாலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அந்த வகையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். இதில் திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் என பலரும் கலந்துகொண்டனர்.

News March 26, 2024

பாபநாசத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

image

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று(மார்ச் 25) நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வகுப்பில், வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காட்சி வழியாகவும், செயல்முறை வழியாகவும் பயிற்சி வழங்கப்பட்டது.

News March 26, 2024

சென்னை: ரூ.5.26 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

image

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் கடந்த மார்ச் 16 முதல் இதுவரை நடைபெற்ற அதிரடி சோதனையில் மொத்தமாக ரூ.59.13 லட்சம் ரொக்கமும், ரூ.5.26 கோடி மதிப்பிலான 7,999 கிராம் தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News March 26, 2024

மாற்றுத்திறனாளிகள் பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் (மாா்ச் 26, 27) நடைபெறவிருந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததன் காரணமாக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.

News March 26, 2024

மாற்றுத்திறனாளிகள் முகாம் தற்காலிக நிறுத்தம்

image

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மக்களவை பொதுத்தேர்தல் முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வழக்கம்போல் நடைபெறும் என்று வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி நேற்று (மார்ச் 25) தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

சென்னை vs குஜராத் : மெட்ரோ சேவை நீட்டிப்பு

image

17வது ஐபிஎல் தொடரில், சென்னை – குஜராத் அணிகள் மோதும் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியை காண சென்னை மாநகர பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட்டுகளை காண்பித்து ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம். மேலும், போட்டி முடிந்து வீடு திரும்ப ஏதுவாக மெட்ரோ ரயில் சேவையும் இன்று நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2024

சேலம்: கட்டுக்கடங்காத காட்டுத் தீ

image

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள கோவிலூர் கிராமம் செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீயானது கடந்த 3 நாட்களாக கட்டுக்கடங்காமல் பற்றி எரிகிறது.
வனத்துறையினர் கடுமையாக போராடியும் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த காட்டுத் தீயினால் பல நூறு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. அங்குள்ள அரிய வகை மூலிகைகளும், பல வகையான விலங்குகளும் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளன .

News March 26, 2024

தஞ்சாவூர் அருகே செவிலியர் தற்கொலை 

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு மேலையூரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் அபிநயா(24). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அபிநயாவை வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபிநயா நேற்று(மார்ச் 25) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரரித்து வருகின்றனர்.

News March 26, 2024

காஞ்சிபுரம்: ஒரே நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல்

image

காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம்(மார்ச் 24) வரை ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், நேற்று(மார்ச் 25) ஒரே நாளில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 6 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வியிடம் அளித்தனர்.

error: Content is protected !!