Tamilnadu

News August 23, 2025

காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

image

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஓரகடம் மற்றும் வெள்ளை கேட் பகுதிகளில் நேற்றிரவு (ஆகஸ்ட் 22) முதல் இன்று (ஆகஸ்ட் 23) விடியற்காலை வரை காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

News August 23, 2025

திருப்பூர்: ஜீ.பே மூலம் ரூ.92,000 வழிப்பறி!

image

திருப்பூர்: பல்லடம், மாணிக்கபுரம் சாலைப் பகுதியில் இணையதள ஆப் மூலம் பழகிய வாலிபர்கள் காட்டுப்பகுதிக்கு கோடாங்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை வரவழைத்து அவரிடம் இருந்த ரூ.92 ஆயிரம் பணத்தை ஜீ.பே மூலமாக பெற்றுக்கொண்டு அடித்து துரத்தியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .இந்த வழக்கில் சபரி ராஜன்,நவீன், சந்திர பிரகாஷ், டேனியல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News August 23, 2025

சேலம்: மகளிர் உரிமைத்தொகை கேட்டு 75,830 விண்ணப்பம்!

image

கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆக.21- ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் 65,658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கலைஞர் உரிமைத்தொகைக் கேட்டு மட்டும் சுமார் 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

News August 23, 2025

நான் முதல்வன் திட்டத்தில் 123 மாணவர்கள் உயர் கல்வி பயன்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறை, வேலைவாய்ப்பு துறை சார்பில் நான் முதல்வன்- உயர்வுக்கு படி திட்ட 3 சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. கடந்த 2 சிறப்பு முகாம்கள் மூலம் 110 மாணவ, மாணவியர் உயர் கல்வியில் சேர்ந்து பயன் பெற்றுள்ளனர். நேற்றைய (ஆக.22) முகாமில் 123 மாணவ, மாணவியர் பங்கேற்று 79 மாணவ, மாணவியர் பயன் பெற்றுள்ளனர். என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News August 23, 2025

கரூரில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்

image

கரூர்: மைலம்பட்டி மேற்கு பகுதியில் மைலம்பட்டி, தரகம்பட்டி, சீதப்பட்டி, அய்யம்பாளையம், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சூரியகாந்தியை சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் அதிக அளவு நடவு செய்கின்றனர். மேலும் தற்போது பெய்துள்ள மழையால் நல்ல விளைச்சலை சூரியகாந்தி கொடுத்துள்ளது என மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் வெளிப்படுத்திக் கொண்டனர்.

News August 23, 2025

மாநில போட்டிக்கு தேர்வாகிய அரசு பள்ளி மாணவி

image

சிவகங்கையில் மாவட்ட அளவிலான புதிய வகை விளையாட்டுப் போட்டிகளில் சிங்கம்புணரி ஆர்.எம்.ஆர்.எம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் (ம) ராகவா ஸ்கூல் ஆப் யோகா பள்ளி மாணவிகள் நால்வர் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தொடுமுறை போட்டியில் சஹானாஸ்ரீ முதல் பரிசும், யோகஸ்ரீ 3-பரிசும் & திவ்யஸ்ரீ கம்பு சுற்றுவதில் மூன்றாம் பரிசு பெற்று வெற்றி பெற்றனர். இதில் சஹானா ஸ்ரீ மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.

News August 23, 2025

நீலகிரி: வாழை தோட்டத்தை சேதம் செய்த காட்டு யானைகள்!

image

புளியம்பாறை பகுதி விவசாயிகள், ஓணம் பண்டிகைக்கு முன், வாழை தார்கள் அறுவடை செய்ய உள்ளனர். காட்டு யானைகள், நுழைவதை தடுக்க தோட்டத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் முகாமிட்ட காட்டு இரண்டு யானைகள், வாழை மரத்தை ஒன்றை, சோலார் மின் வேலி மீது சாய்த்து, மின் சப்ளை துண்டிக்கப்பட்வுடன், கம்பியை லாவகமாக கடந்து, தோட்டத்தில் நுழைந்து,வாழை மரங்களை சேதம் உட்கொண்டு சென்றுள்ளன.

News August 23, 2025

தேனியில் இயந்திர நடவு செய்ய அரசு மானியம்

image

குறுவை நெல் சாகுபடி செய்து இயந்திர நடவு மேற்கொண்டால் ஏக்கருக்கு ரூபாய் 4000/- வரை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 2500 விவசாயிகள் மானியம் பெற்று பயனடைந்துள்ளதாகவும், மக்காச் சோளத்திற்கும் மானியம் வழங்கப்படுவதாகவும் விருப்பமுள்ள விவசாயிகள் இதனை பெற்று பயனடையலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2025

திண்டுக்கல்லில் மாபெரும் மாரத்தான் போட்டி

image

திண்டுக்கல்லில் இன்று(ஆக.23) காலை 6 மணிக்கு மாரத்தான் போட்டி தொடங்கியது. டட்லி பள்ளி மைதானம் மற்றும் அங்கு விலாஸ் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ. 4000, மூன்றாம் பரிசு ரூ.3000, நான்காம் பரிசு ரூ.2000, ஐந்தாம் பரிசு ரூ.1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

News August 23, 2025

மறந்துடாதீங்க – இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ( ஆக.23) காலை 8 மணியளவில் கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!