Tamilnadu

News August 22, 2025

விழுப்புரம் மக்களே எச்சரிக்கையாக இருங்க!!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது. அதில், உங்கள் வாகனங்களை பார்க்கிங்க் இடத்தில் நிறுத்தப்படும் போது. அந்த வாகனத்தில் உள்ளே மதிப்புமிக்க பொருள்களையோ, பணத்தையோ வைக்க வேண்டாம். அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் என விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது.

News August 22, 2025

நெல்லை: வந்தே பாரத் உணவு குடோனில் தீ விபத்து

image

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்களுக்கு உணவும் தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த உணவு தயாரிக்கும் அறை நெல்லை ரயில் நிலையம் அருகே உள்ள பாலபாக்கிய நகர் பகுதியில் உள்ளது. அங்கு சமையலறை பகுதியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கொதிக்கும் எண்ணெய் சட்டி கொட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News August 22, 2025

பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை தேதி நீட்டிப்பு

image

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் பேரூரில் அரசு ஐடிஐ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அட்வான்ஸ் சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப பணியாளா், மெக்கானிக், வயா்மேன் போன்ற பிரிவுகளுக்கு நடப்பாண்டுக்கான நேரடி சோ்க்கைக்கு 8, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேதி ஆக.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2025

சென்னை தினம்: அமைச்சர் வாழ்த்து

image

சென்னை தினத்தையொட்டி அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள X பதிவில், மெரினா கடல் அலைகள் முதல் நவீன ஐ.டி.சாலைகள் வரை நம் சென்னை வளர்ச்சி (ம) மனிதநேயத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்நாளில் நம் நகரின் பயணத்தை நாம் பெருமையுடன் கொண்டாடுவோம். வந்தாரை வாழ வைக்கும் நம் சென்னை எனப் பதிவிட்டுள்ளார்.

News August 22, 2025

விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17482315>>மேலும் அறிய<<>>

News August 22, 2025

வேலூர்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17482322>>மேலும் விவரங்களுக்கு<<>>

News August 22, 2025

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொதுமக்கள் தங்களது வாகனங்களில் செல்லும் பொழுது அசம்பாவிதங்களை தவிர்க்க, குன்றும் குழியுமாக உள்ள சாலையில் மெதுவாகவும் எச்சரிக்கையுடனும் வாகனம் ஓட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளனர்.

News August 22, 2025

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

image

ஈரோடு மேட்டூா் சாலை அருகே பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனையில் பித்தளை, பேப்பா் கூழ், மண், வெள்ளெருக்குவோ், மாா்பில் பவுடா், மாவுக்கல், கருங்கல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.

News August 22, 2025

அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம்

image

திண்டுக்கல்: மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்தில் அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் இன்று(ஆக.22) அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இதில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News August 22, 2025

ரூ.59.19 லட்சம் அபராதம் – அதிகாரிகள் தகவல்

image

சேலம் சரகத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 1,232 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூபாய் 59.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும், 215 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விபத்தை ஏற்படுத்திய 77 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!