Tamilnadu

News April 15, 2024

பழனி கிரிவலப்பாதை:  நீதிமன்றம் உத்தரவு

image

பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது. 

News April 15, 2024

தூத்துக்குடி: வாக்களிக்க விடுமுறை

image

1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 135ன் படி இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தொழிலாளர் துறை அறிவுரைகளின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 15, 2024

பாளையங்கோட்டையில் பெண்கள் சாலை மறியல்

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதிக்கு உட்பட்ட மார்க்கெட் அருகில் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று (ஏப். 15) மதியம் திடீரென்று அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலைந்து சென்றனர்.

News April 15, 2024

தி.மலை: வான்வழி சாகச நிகழ்ச்சி

image

2024 மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு அரங்கில் வான்வழி சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News April 15, 2024

கோவையில் வரும் 19ம் தேதி மழைக்கு வாய்ப்பு

image

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த 2 தினங்களாக தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே கோவை மாவட்டத்தில் வரும் 19ம் தேதி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News April 15, 2024

தபால் வாக்குகள் பதிவு செய்யும் காவல்துறையினர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் 745 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஏராளமான காவல் துறையினர் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

News April 15, 2024

வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

image

 வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வரும் 21-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினமும் அம்மன் வீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியத் திருவிழாவான தேரோட்டத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

News April 15, 2024

தொலைதூர கல்வி தேர்வு

image

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரம் மற்றும் இணையவழி கல்வி முறையில் 2024 ஆம் ஆண்டில் சேர்க்கை பெற்ற மாணவருக்கு தேர்வு விண்ணப்பித்தல் விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது http/https:/coe.annamalaiuniversity.ac.in/bank/examreg.php என்ற தளத்தில் இன்று முதல் தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வுக்கான அட்டவணையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2024

ராம்நாடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (15.04.2024) மூன்றாம் கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தலில் அனைவரும் சிறப்பாக பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

News April 15, 2024

கலெக்டர் தலைமையில் காபி வித் கலெக்டர்

image

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில் பயிலும் 170-க்கும் மேற்பட்ட முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் சிறப்பு காபி வித் கலெக்டர் 70 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

error: Content is protected !!