Tamilnadu

News April 14, 2026

கடலூர் மாவட்டத்தில் இயல்பை விட கூடுதல் மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் இன்று ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இயல்பாக 25.9 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 44.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 71 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 14, 2026

புதுச்சேரி: பரபரப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டல்

image

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு ஈ-மெயில் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ‘லியோ’ உதவியுடன் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். மதியம் 1:30 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், இது ஒரு வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.

News April 14, 2026

கோவை தெற்கு: 2-ம் கட்ட பிரச்சாரம் துவக்கம்

image

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது முதற்கட்டப் பிரச்சாரத்தை நேற்று இரவு நிறைவு செய்த நிலையில், இன்று காலை 2-ம் கட்ட வாக்கு சேகரிப்பை தீவிரமாக தொடங்கினார். ஒவ்வொரு வார்டாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய அவர், கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

News April 14, 2026

திருச்சி: ரூ.1.36 கோடி விடுவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,40,80,503 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,36,98,583 தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News April 14, 2026

நாமக்கல்: கறிக்கோழி விலை கிடுகிடு உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டை கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.92 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

News April 14, 2026

ஸ்ரீரங்கம்: வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறப்பு!

image

திருச்சி மேலூர் பகுதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் இன்று (ஏப்.14) செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வண்ணத்துப்பூச்சி பூங்கா திறந்திருக்கும். பொதுமக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

News April 14, 2026

தென்காசி: மதிமுக ஒன்றிய கவுன்சிலரிடம் பணம் பறிமுதல்

image

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் குருவிகுளத்தை சேர்ந்த மதிமுக ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் பணம் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் நேற்று சிவகிரி தேர்தல் தாசில்தார் ரவி கணேஷிடம் ஒப்படைத்தனர்.

News April 14, 2026

திருப்பூர் வரும் விஜய்!

image

திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மற்றும் பரப்புரை மேற்கொள்ளக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அங்கு பரப்புரை மேற்கொள்ள தற்போது சென்னையில் இருந்து விஜய் தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டுள்ளார். பின்னர் சாலை மார்க்கமாக வந்து திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

News April 14, 2026

புதுகையில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம்

image

புதுகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ், மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை செயல்படும் இம்மையத்தில் பல்வேறு குறைபாடு உள்ளவர்களுக்கு உயர்தர மறுவாழ்வு பயிற்சிகள் தகுதியான பயிற்சியாளர்களால் வழங்கப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News April 14, 2026

கோவை வரும் விஜய்

image

திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வருகிறார். மதியம் கோவை வந்தடையும் அவர், அங்கிருந்து கார் மூலம் அவிநாசி செல்கிறார். மாலை 3மணிக்கு அவிநாசியில் ரோடு ஷோ நடத்தும் விஜய், பின் பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் 8 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறார். இதை முன்னிட்டு கோவை (ம) திருப்பூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!
↑