India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் வனத்துறை அறிவித்துள்ள நேர கட்டுப்பாட்டை மீறி சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் இரும்பு கம்பியிலான டோல் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரும்பு கேட் அமைத்த வனத்துறையினர். மாலை 6 மணிக்கு மேல் பழைய குற்றால அருவிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தகவல். *ஷேர் பண்ணுங்க
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, கடலாடி, பரமக்குடி, உத்திரகோசமங்கை மற்றும் முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராணடு, இரண்டு ஆண்டு தொழில் படிப்பதற்கான நேரடி சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ.750 உதவி தொகையும் லேப்டாப் மற்றும் மிதிவண்டியும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.
செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு ரூ. 830.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
திருப்பத்தூர் மக்களே AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம் விருப்பமுள்ளவர்கள் <
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நெகிழி இல்லா மாவட்டம் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள நுழைவாயில் வளைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் பார்வையிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார். உடன் மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் உள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு 6 மையங்களில் இன்று(ஆக.17) நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1,823 பேர் எழுதினார். வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார், ஆய்வின்போது வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் உடன் இருந்தார். தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10 மணிக்கு “பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்” என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் முச்சந்தியம்மன் கோவிலில் ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) அன்று திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், வணிகர் சங்க தலைவர் செந்தமிழ்ச்செல்வன், ஆதி.ஜனகர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.