Tamilnadu

News August 17, 2025

சிவகாசியில் ஒரு வாரத்தில் 3 கொலைகள்

image

சிவகாசியில் அடுத்தடுத்து நடந்துள்ள 3 கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த 12-ம் தேதி நேருஜி நகரில் கணேஷ் பாண்டி என்ற இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 13-ம் தேதி எம்.புதுப்பட்டி பகுதியில் தர்மராஜ் (21) காட்டுப்பகுதிக்குள் கொலை செய்யப்பட்டார். 14-ம் தேதி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த சுந்தர மகாலிங்கம் கொலை செய்து கண்மாயில் புதைக்கப்பட்டுள்ளார்.

News August 17, 2025

தென்காசி பொது தொகுதியாக மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

image

தென்காசி நாடாளுமன்ற மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை பொது தொகுதிகளாக மாற்றக்கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ஜி.அருள்முருகன், இந்த விவகாரம் ஐகோர்ட்டின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும், இந்திய தேர்தல் ஆணையமே தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மனுதாரர் சட்டப்படி தீர்வு நாடலாம் எனவும் தெரிவித்தனர்.

News August 17, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்துக் காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 16) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்காக காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

News August 17, 2025

வெலிங்டன் மருத்துவமனைகள் இணைந்து இலவச மருத்துவ முகாம்

image

குன்னூர் அருகே கோவை கேஜி மருத்துவமனை மற்றும் வெலிங்டன் கண்ட்டோன்மென்ட் மருத்துவமனை இணைந்து நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதயம், எலும்பு, வெரிகோஸ்வெயின் நோய்களுக்கு ஆலோசனை மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவச எக்கோ சிகிச்சை வழங்கப்படுகிறது.

News August 17, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் -16 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News August 17, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16.08.2025 இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 17, 2025

ஈரோடு: இரண்டு சிறுவர்கள் கைது

image

ஈரோடு, சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசியனூர் பகுதியில், ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து, 250 போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பிரபல கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை செய்த போது, போதை மாத்திரை இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக 2 சிறுவர்களை பிடித்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்துள்ளனர்.

News August 17, 2025

ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றம்

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் கொல்லம் மெயில் மற்றும் குருவாயூர் விரைவு ஆகிய ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது தாம்பரத்தில் இருந்து புறப்படும் நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News August 17, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (16.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

News August 17, 2025

பெரம்பலூர்: கல்லூரி மாணவருக்கு ஆட்சியர் உதவி

image

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் தனது மகன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் நிலையில் தனது கணவர் இறந்துவிட்டதால் குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர இயலாத நிலை என்றும், கல்விக்கட்டணம் கட்ட உதவிடும்படி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையினை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.55,000 வழங்கினார்.

error: Content is protected !!