India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், சின்னமனூர், போடி, தேவாரம் ஆகிய 7 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. இன்று (சனிக்கிழமை) உழவர் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு உழவர் சந்தைகள் இன்று (ஜன.17) இயங்காது எனவும், நாளை (ஜன.18) வழக்கம் போல் செயல்படும் என உழவர் சந்தை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் கொடைரோடு மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில், ராஜதானிக்கோட்டையைச் சேர்ந்த மனோஜ் தரப்பினர் ஆரோக்கிய வினோத் என்பவரின் வீட்டிற்குச் சென்று அவரை அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த ரிச்சர்டு வினோத்துக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மனோஜ், மருதுபாண்டி, அரவிந்த் ஆகிய மூவரை அம்மைநாயக்கனூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் புதூர் பாரதி வீதியை சேர்ந்தவர் பெயிண்டர் அருண்குமார்(25). இவர் திருவிக வீதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலிக்க வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் அருண்குமாரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருண்குமார் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்னிலம் அருகே சொரக்குடி, மூங்கில்குடி, விசலூர், காக்கா கோட்டூர் பகுதிகளில் நேற்று காலை ஒரு விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்தது. மேலும் மிகவும் தாழ்வாக தென்னை மரங்களை தொட்டுச் செல்லும் அளவிற்கு பறந்ததால் பலத்த சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனை அடுத்து, தாழ்வாகப் பறந்தது பயிற்சி விமானம் என்பது தெரிய வந்தது.

சேலம் மூணாங்கரடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கிச்சிபாளையத்தைச் சேர்ந்த கனிமொழி (47) என்பவரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். தகவலின் பேரில் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 44 காவல் நிலைய ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்ற காவல்துறை வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

சென்னையை சுற்றிப் பார்க்க ஆசையா? அதிகமா பணம் செலவாகும்னு நினைக்கிறீங்களா? அதான் இல்ல. MTC ‘சென்னை உலா’ என்ற ‘வின்டேஜ்’ ஸ்டைல் பேருந்து சேவையை துவக்கியுள்ளது. இதில் சென்னை சென்ட்ரலிலிருந்து வள்ளுவர் கோட்டம், கண்ணகி சிலை வழியாக பல்லவன் இல்லம் வரை 16 இடங்களுக்கு செல்ல, ரூ.50 தான் கட்டணம். ஒரு டிக்கெட்டில் எங்க வேணும்னாலும் ஏறலாம், இறங்கலாம். <
Sorry, no posts matched your criteria.