India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூரில் பரப்புரையில் ஈடுப்பட எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் ‘காப்பி-பேஸ்ட்’ செய்து புதுப்பெயர் சூட்டி மீண்டும் வெளியிட்டு வருகிறார். அரசாங்கத்தின் தனிப்பட்ட சாதனை என்ற ஒன்றும் இல்லை. ஆட்சி முடியும் தருவாயில், விளம்பர நோக்கத்திற்காக தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தேர்தலுக்கு முன் அரசியல் பயன்பெறும் முயற்சி” என விமர்சித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்கிவருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 3 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 1 பாராளுமன்ற தொகுதி
▶️ 287 வருவாய் கிராமங்கள்
▶️ 241 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 5 ஊராட்சி ஒன்றியங்கள்
▶️ 2 வட்டங்கள்
▶️ 2 கோட்டங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
ஈரோட்டில் ஆவின் பால் நிறுவனத்திற்கு மொத்த விற்பனையாளர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பம்முள்ளவர்கள் தகுந்த ஆவணக்களுடன் விண்ணப்பங்களை பொது மேலாளர், ED.296.ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், வாசவி கல்லூரி அஞ்சல், ஈரோடு 638 316 என்ற முகவரிக்கு அனுப்புங்க! மேலும் விபரங்களுக்கு <
சந்தைப்பேட்டையை சேர்த்தவர் ஜாகீர் உசேன். இவருக்கு வசந்தியுடன் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறால் வசந்தி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை வசந்தி வீட்டிற்கு சென்ற ஜாகீர் உசேன், தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரது ஸ்கூட்டருக்கு தீ வைத்தார். வசந்தியின் புகாரின் பேரில் ஜாகீர் உசேன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை இருவர் திருட முயன்றனர். அதிகாலை 5:00 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், பொதுமக்கள் ரூபனை என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரில் ஒருவரான சந்தோஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். விழுப்புரம் போலீசார் ரூபனைக் கைது செய்ததுடன், தப்பியோடிய சந்தோஷையும் தேடி வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வு காரணமாக ஒரு திருடன் பிடிபட்டுள்ளான்.
தர்மபுரியில், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கனகசனிடம் பழைய கார் விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 4.30 லட்சம் மோசடி செய்த வழக்கில், வடிவேல் என்ற நபர் கைது செய்யப்பட்டார். காரின் ஆர்.சி புத்தகத்தை தராமல் மீதி பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றியதால், கனகசன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல்துறையினர் வடிவேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர், ஒரகடம், ரெட்ஹில்ஸ், புழல், பாடியநல்லூர், வண்டிமேடு, நாரவாரிக்குப்பம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், பெசன்ட் நகர், அடையாறு, காந்தி நகர், மணலி, 200 அடி சாலை, பர்மா நகர், VOC நகர், பொன்னேரி, MMDA, கூடுவாஞ்சேரி, ஜே.ஜே.நகர், எழில் நகர், ஈஞ்சம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்
மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடவுச்சொல் பாதுகாப்பு
தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்குங்கள். இரண்டு அடுக்கு பாதுகாப்பினை பயன்படுத்தவும். கடவுச்சொற்களை யாருடனும், ஒருபோதும் பகிர வேண்டாம். கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றவும். தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்த வேண்டாம். குறைந்தது 8 எழுத்துகள் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பெரம்பலூர் நகரப் பகுதியில் சிவன் கோயில் அருகில் ஆட்டோ டிரைவர் ரவி என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் வழிமறித்து, அருவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். ஆபத்தான நிலையில் ரவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் ஈடுபட்ட கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
உ.நெமிலியை சேர்ந்த மாரியும், ஆனந்தன் என்பவரும் ஒரே ஊர், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் மாரியின் வீட்டில் உள்ள வேப்பமர கிளை ஆனந்தன் வீட்டின் பக்கம் சென்றதால் ஆனந்தன், பழனிவேல், காசிராஜன், உண்ணாமலை, தமிழ்மணி ஆகியோர் சேர்ந்து அதை வெட்டியுள்ளனர். இதை கேட்ட மாரியை அனைவரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் 5 பேர் மீதும் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.