Tamilnadu

News August 15, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News August 15, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (15/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 15, 2025

நாமக்கல்லில் முட்டை விலை மாற்றம் இல்லை

image

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) கூட்டம் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், ஒரு முட்டையின் விலை தொடர்ந்து ரூ.4.90 ஆகவே நீடிக்கிறது.

News August 15, 2025

காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் போலீசார் இன்று (15.08.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும் பகிரவும்*

News August 15, 2025

சேலத்தில் இலவசம்: உடனே APPLY பண்ணுங்க!

image

சேலத்தில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 15, 2025

நெல்லையில் நீச்சல் பயிற்றுநருக்கு அழைப்பு

image

நெல்லையில் கேலோ இந்தியா நீச்சல் மையம், பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இயங்குகிறது. இங்கு 30 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நீச்சல் பயிற்சியாளர் பணியிடம் காலியாக உள்ளது. 40 வயதுக்குட்பட்ட, தேசிய/சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.25,000 கட்டணம், 11 மாதங்களுக்கு வழங்கப்படும். (விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.20) *ஷேர் செய்யுங்கள்

News August 15, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக-15) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 15, 2025

மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பயிலும் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில், Coffee with Collector கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (ஆக.15) நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையார் அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, பயிற்சி ஆட்சியர் மாலதி மற்றும் பலர் பங்கேற்றனர்.

News August 15, 2025

ராணிப்பேட்டை: காவல் அதிகாரிகளுக்கு விருது

image

இன்று (ஆகஸ்ட்-15) 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அய்மான் ஜமால் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி, காவல் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 37 காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சக ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துக்கள் வழங்கப்பட்டது.

News August 15, 2025

ராணிப்பேட்டையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

இராணிப்பேட்டை மாவட்டம் களியரசு (வயது 20) என்பவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக காவல் துறை நடவடிக்கை எடுத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 14.08.2025 அன்று கைது செய்யப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!